Wednesday Jan 01, 2025

ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்யலாமா கூடாதா?

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசையன்று மாலை சூர்ய க்ரஹணம்.  ஒரே நாளில் இரண்டு தர்ப்பணங்கள் செய்யலாமா கூடாதா என்று பலருக்கு வெவ்வேறு கருத்துக்கள் உலவி வருகிறது.

அதற்கான விளக்கத்தை பார்க்கலாம்

தர்ப்பணங்களை நித்ய தர்ப்பணம் நைமித்திக தர்ப்பணம், காம்ய தர்ப்பணம் என்று தர்ப்பனங்களை மூன்று விதமாக பிரித்திற்கிறார்கள்.

அமாவாசை நித்ய தர்ப்பண வகையை சார்ந்தது. ..!!

மாத பிறப்பு நைமித்திக தர்ப்பண வகையை சார்ந்தது…!!

கிரஹண தர்ப்பணம் காம்ய தர்ப்பண வகையை சார்ந்தது…!!

ஒரு நாளில் இரு தர்ப்பணங்கள் செய்ய கூடாதுஎன்பது பொது விதி..!!

 எடுத்துக்காட்டாக 25-10-2022 அன்று அமாவாசை மாலை சூரிய கிரஹணம். வழக்கம் போல் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும். மாலை 5-30 மணிக்கு கிரஹண தர்ப்பணமும் செய்ய வேண்டும். ..!!

ஒரு   நித்திய தர்ப்பணமும் ஒரு காம்ய தர்ப்பணமும் ஒரே நாளில் செய்யலாம். ஆனால் ஒரே நாளில் இரு நித்திய தர்ப்பணமோ, இரு காம்ய தர்ப்பணமோ தான் செய்ய கூடாது அதனால் அமாவாசை தர்ப்பணமும் க்ரஹண தர்ப்பணமும் செய்ய வேண்டியது அவசியம்.!!

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top