Wednesday Jul 24, 2024

புல்லம்பாக்கம் ருத்ரவாலீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

புல்லம்பாக்கம் ருத்ரவாலீஸ்வரர் சிவன் கோயில், புல்லம்பாக்கம், உத்திரமேரூர் வட்டம், அருகில், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 106.

இறைவன்

இறைவன்: ருத்ரவாலீஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது புல்லம்பாக்கம் கிராமம் . செய்யாறு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இச்சிவன் கோவில் மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. இக்கோவில் செங்கற்களால் ஆன கற்றளி ஆகும். முற்றிலும் சிதிலமாகி கருவேலம்செடிகள் சுற்றிலும் சூழ்ந்து காணப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமையான இந்தக்கோவில் அழிவின் உச்சத்தில் உள்ளது. விமானம் முற்றிலும் செடிகள் முளைத்துள்ளன. கோவில் தற்போது தோலுரித்த உடம்புப்போல் காட்சியளிக்கிறது. முற்றிலும் செங்கற்கள் வெளியில் தெரிகிறது. நுழைவாயிலின் மேலே உள்ள மூர்த்தங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டுகிறது. மற்றும் மூர்த்தங்கள் பல காணவில்லை. கோயிலின் கதவு உடைந்து உள்ளது. ஒருவேளை பூஜைக்கூட நடைபெறவில்லை. சுற்றியுள்ள கிராம மக்கள் இக்கோவிலுக்கு வருவதாக தெரிவதில்லை. ஆதலால் கோவில் உள்ள அனைத்து இடங்களில் செடிகள் முளைத்துள்ளன. பராமரிப்பு சுத்தமாக இல்லை. முன்பொரு காலத்தில் அல்லும் பகலும் வெளிச்சத்தில் இருந்த இறைவன் தற்போது ஒருவேளைக்கூட விளக்கேற்ற ஆளில்லாமல் உள்ளார். இறைவன் பெயர் ருத்ரவாலீஸ்வரர் ஆகும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புல்லம்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வாலாஜாபாத்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top