Wednesday Dec 04, 2024

பழையாறை வடதளி சோமேஸ்வரர் கோவில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழபழையாறை- 612 703, பட்டீஸ்வரம் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். போன் +91 – 98945 69543

இறைவன்

இறைவன்: வடதளி சோமேசர் இறைவி: சோமகளாம்பிகை

அறிமுகம்

பழையாறை சோமேசர் கோயில் அல்லது பழையாறை – வடதளி – பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இச்சிவாலயம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் உண்ணாவிரதமிருந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை (ஐதிகம்). காவிரி தென்கரைத் தலங்களில் 24ஆவது சிவத்தலமாகும். வடதளியில் சுவாமி, விமலநாயகி உடனுறை தருமபுரீசுவரராகவும், பழையாறையில் சுவாமி, சோமகமலாம்பிகை உடனுறை சோமேசராகவும் காட்சி அளிக்கின்றனர். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் கருடன் தன் தாயின் அடிமைத்தனம் நீங்கத் தேவேந்திரனிடம் அமிர்த கலசம் பெற்றுக் இத்தலத்தின் வழியே வரும்போது அசுரர்கள் இதைக்கண்டு கருடனுடன் சண்டை மூண்டது. குடத்திலிருந்து மூன்று துளிகள் நெல்லிவனமான இத்தலத்தில் சிந்தின. அத்துளிகள் சிவலிங்கம், அம்பிகை, தீர்த்தம் ஆகிய மூன்றாயின. கருடன் தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டு உய்ந்தது. கருடன் தனியே தன்பெயரால் உண்டாக்கிய தீர்த்தம் சடாயு தீர்த்தம் என வழங்கப்படுகிறது.சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம். அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது. கோயில்முன் மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்க்கை உருவமும் அழகுடையன. பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது. இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1) நல்லூர் 2)வலஞ்சுழி 3) சத்திமுற்றம் 4) பட்டீச்சரம் 5) ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷிணாயன புண்ணிய நாளில் – வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்கவும், கலைகளில் சிறந்து விளங்கவும், உடற்பிணி நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சோழ வரலாற்று சிறப்புமிக்க ஊர். இன்று சிதிலமடைந்து உள்ளது. பழையாறை கோயிலும் பழையாறை வடதளியும் சேர்த்து பாடப் பட்டதாக கொள்ள வேண்டும். அருகில் வைணவ திவ்யதலம் நந்திபுர விண்ணகரம். இக்கோயில் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கருடன் , ஆதிசேஷன் வழிபட்ட தலம். இத்தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று வீரதுர்க்கை அம்மன்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 87 வது தேவாரத்தலம் ஆகும். சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டுக் கலைகள் வளரவும், கயரோகம் நீங்கவும் அருள்பெற்ற தலம். அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இத்தலத்திற்கு உள்ளது. தல புராணம் 15 அத்தியாயங்கள் கொண்டது. கோயில்முன் மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்க்கை உருவமும் அழகுடையன. பிற்காலச் சோழர் ஆட்சியில் இத்தலம் இரண்டாவது தலைநகராய் சிறந்து விளங்கியது. இத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1) நல்லூர் 2)வலஞ்சுழி 3) சத்திமுற்றம் 4) பட்டீச்சரம் 5) ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷிணாயன புண்ணிய நாளில் – வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது. இங்குள்ள கைலாசநாதரை ராஜராஜசோழன் தினமும் வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த கைலாச நாதரை வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

ஐப்பசி பவுர்ணமி, திருகார்த்திகை, மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பழையாறை வடதளி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top