Tuesday Oct 08, 2024

தேலி கா மந்திர், குவாலியர் கோட்டை, மத்தியப் பிரதேசம்

முகவரி

தேலி கா மந்திர், குவாலியர் கோட்டை, குவாலியர், மத்தியப் பிரதேசம் – 474 008.

இறைவன்

இறைவன்: சிவன், விஷ்ணு

அறிமுகம்

தேலி கா மந்திர், குவாலியர் கோட்டை மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பகவான் விஷ்ணு, பகவான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது எண்ணெய் வணிகரின் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஒரு எண்ணெய் வியாபாரியின் பணத்தை வைத்து இக்கோவிலை கட்டினதால் இப்பெயர் வந்ததாக கூருகிறார்கள். மற்றொரு பக்கம் பொ.யு 833-885க்கு இடைப்பட்ட காலத்துல பிரதிஹாரா பேரரசை சேர்ந்த மிகிர போஜ ராஜாவால கட்டப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இது 100 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான கட்டுமானமாகும். ஆனால் தற்போது உள்ளே சென்று பார்த்தால் முற்றிலும் வவ்வால்களின் சாம்ராஜ்யம் தான். குவாலியர் கோட்டைல இருக்கும் கட்டிடங்களிலேயே மிக உயரமான கோவில் இது தான். கிழக்கு பக்கத்தில் இருக்கும் படிக்கட்டுகள் வழியே உள்ளே சென்றால் உள்ளே கர்ப்பக்கிரகம், சுற்றுப்பிரகாரம் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு, இதன் கட்டமைப்பில் திராவிட மற்றும் நாகர பாணிகள் இரண்டுமே உபயோகப்பட்டு இருக்கிறது.

புராண முக்கியத்துவம்

இதன் கூரையானது திராவிடக் கட்டிடக் கலையம்சத்துடனும், சிற்பங்களும், வேலைப்பாடுகளும் வட இந்திய பாணியிலும் அமைந்துள்ளன. இந்து மற்றும் புத்த மதக் கட்டிடக் கலைநுணுக்கங்கள் கலந்துள்ளன. குவாலியர் கோட்டை வளாகத்தினுள் காணப்படும் பழமையான கட்டிடம் இதுவாகும். இது 11ஆம் நூற்றாண்டு அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் விஷ்ணு கோவிலாக இருந்து பின்னர் சிவன் கோவிலாக மாற்றப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலின் உள்ளே அம்மன் சிலை, பாம்பு சிலைகள், ஜோடிகளின் சிற்பங்கள், கருடன் சிலை ஆகியவை உள்ளன. கோவிலின் வெளிப்புறச் சுவர்களில் நிறைய சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கு. இக்கோவிலைக்கட்டி பல நூற்றாண்டுகள் ஆனதாலையும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் பெருமளவில் சிற்பங்கள் சிதிலப்பட்டு கிடக்கிறது. முதலில் விஷ்ணு கோவிலாகவும் பின்னாட்களில் சிவனுக்கெனவும் இருந்ததாக இங்கே குறிப்புகள் காணப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோவிலின் வெளியே ஒரு நுழைவாயிலும், இரு சிறிய மண்டபங்களும் கட்டப்பட்டதாவும் கூறுகிறார்கள். பலர் வந்து பார்வையிட்டு செல்லும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கும் கோவிலினை சிறப்பாக பராமரிக்க வேண்டும் .

காலம்

9 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குவாலிடர் கோட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

குவாலியர்

அருகிலுள்ள விமான நிலையம்

குவாலியர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top