ஸ்ரீபெரும்புதூர் பூதபுரிஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி :
அருள்மிகு பூதபுரிஸ்வரர் திருக்கோயில்,
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் – 602105.
இறைவன்:
பூதபுரிஸ்வரர்
இறைவி:
சௌந்திர நாயகி
அறிமுகம்:
பூதபுரிஸ்வரர்கோயில் என்பது தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்தும் பாதை உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இக்கோயில் குறித்து நிலவும் தொன்மத்தின்படி, சிவனினது ஆனந்த தாண்டவத்தின்போது அவரது ஆடைகள் நெகிழ்ந்ததாக் கண்டு பூத கணங்கள் சிரித்தன. இதனால் சினம் கொண்ட உருத்ரன் கைலாயத்தை விட்டு அவற்றை அகலுமாறு ஆணைப் பிறப்பித்தார். தங்கள் தவறை உணர்ந்த பூதகணங்கள் பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தன. அவர்களின் முன் தோன்றிய பெருமாளிடம் தங்கள் தவறுக்கு பிராயச்சித்தத்தை வேண்டினர். அவரும் பூதகணங்கள் ஆதிஷேஷ தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபடச் சொன்னார். இவ்வாறு பூஜித்த பூதகணங்களுக்கு சிவன் காட்சி கொடுத்து அவர்களின் தவறை மன்னின்னித்தார். சிவபெருமானிடம் பூதகணங்கள் தங்களுக்கு உதவிய பெருமாளுக்கு கோவில் கட்ட விருப்பம் தெரிவித்தன. அதற்கு சிவனும் அனுமதியளித்தார். கட்டுமானம் தடைப்பட அதற்கு பரிகாரமாக ஜெயபூத விநாயகர் ஆலயம் கட்டினார்கள். மகிழமரத்தடியில் சிவபெருமானுக்கு கோவில் கட்டினர் (பூதபுரீஸ்வரர் கோவில்). அதன் பின்னர் பெருமாளுக்கு கோவில் கட்டினர். பூதங்களால் உருவாக்கப் பட்டதால் இது பூதபுரி என்றுபம், பஞ்ச பூதங்கள் வழிபடுவதால் பூதூர் என்றும், ஊர் பெரியதாகையால் பெரும்பூதூர் என்றும், மங்களமாக இருக்க ஸ்ரீ சேர்த்து ஸ்ரீபெரும்புதூர் என்று பெயர்பெற்றது எனப்படுகிறது.
இக்கோயிலானது ஊரின் கிழக்கில் மேற்கு நுழைவாயிலைக் கொண்டுள்ளது. இக்கோயிலின் மூலவராக பூதபுரிஸ்வரரர் உள்ளார். இங்குள்ள இறைவி சௌந்திர நாயகி தனிக் கோயிலில் உள்ளார். இக்கோயில் வளாகத்தில் இராச கணபதி, வள்ளி தெய்வானை முருகர, அனுமான் ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன. கோட்ட தெய்வங்களாக துர்கை, பிரம்மன், விஷ்ணு, தட்சிணாமூர்த்தி சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். கோயில் தலமரம் மகிழமரம், தீர்த்தம் பூதபுஷ்கரணி. இக்கோயில் மிகப்பழமையான கோயிலாகும் கோயில் சுவற்களில் பல கல்வெட்டுகள் உள்ளன.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்தரத்தின்போது திருக்கல்யாண உற்சவமும் தேர்த் திருவிழாவும் நடக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஸ்ரீபெரும்புதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை