ஸ்ரீ ராணக்பூர் சமணர் கோயில், இராஜஸ்தான்
முகவரி
ஸ்ரீ ரானக்பூர் கோயில் தேசூரி, ரணக்பூர் ஆர்.டி, சத்ரி, ராஜஸ்தான்- 306702
இறைவன்
இறைவன்: ஆதிநாதர்
அறிமுகம்
ராணக்பூர் சமணர் கோயில்கள், இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரில், பாலி மாவட்டத்தில் உள்ள ராணக்பூர் கிராமத்தில், சமணத் தீர்த்தங்கரர்களில் முதல்வரான ஆதிநாதர் எனும் ரிசபநாதர் மற்றும் 7வது தீர்த்தங்கரரான சுபர்சுவநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அழகிய சிற்பங்களைக் கொண்ட கோயில்களாகும். இக்கோயில் உதய்பூர் நகரத்திலிருந்து 95 கி.மீ தொலைவிலும்; ஜெய்ப்பூரிலிருந்து 370 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்கோயில் மேவார் மன்னரான ராண கும்பாவின் உதவியுடன் ரணக்பூரின் சமண வணிகரான தர்னாஷா என்பவர் கிபி 15ம் நூற்றாண்டில் கட்டினார். இது மூன்று கோயில்களின் தொகுப்பாகும். சமணர்களின் ஐந்து முக்கிய யாத்திரைத் தலங்களில் ராணக்ப்பூர் சமணர் கோயில்களும் ஒன்றாகும்.
சிறப்பு அம்சங்கள்
ராணக்பூர் சமணர் கோயில் இளம் நிறத்தில் 60 x 62 மீட்டர் என்ற அளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் அழகிய குவிமாடங்கள், விமானங்கள், சிறுகோபுரங்கள் மற்றும் விதானங்கள் ரணக்பூரின் மலைச்சரிவில் அழகானகாட்சியளிக்கிறது. சிற்பங்களுடன்கூடிய இக்கோயிலை 1444 பளிங்குத் தூண்கள் தாங்கி நிற்கிறது. இது மூன்று கோயில்கள் கொண்ட கட்டிடத் தொகுதியாகும். இத்தூண்களில் உள்ள சிலைகள் ஒன்றை ஒன்று பார்க்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 108 தலைகளுடனும், வால்களுடன் கூடிய பாம்புச் சிற்பம் மிகவும் அழகான ஒன்றாகும். 6 அடி உயரம் கொண்ட கோயில் மூலவரான ஆதிநாதர் எனும் பார்சுவநாதரின் சிலை வெள்ளை பளிங்குக் கல்லால் ஆனது.இக்கோயில் வளாகத்தில், பார்சுவநாதர் கோயிலுக்கு அருகில் 22வது தீர்த்தங்கரரான நேமிநாதருக்கும், சூரிய பகவானுக்கும் தனித்தனி கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கட்டிட அமைப்பு, நான்முக வடிவில் கட்டப்பட்டுள்ளது. இராஸ்தானின் பண்டைய மிர்பூர் சமணர் கோயிலை அடிப்படையாகக்கொண்டு, இக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் வளாகத்தில் 13ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்த சூரியக் கோயில் சிதிலமடைந்த பின்னர் மீண்டும் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் 7வது தீர்த்தங்கரரான சுபர்சுவநாதருக்கு அர்பணிக்கப்பட்டதாகும். இக்கோயில் அழகிய சிற்பங்களுக்கும், கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்றது.
காலம்
15 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இராஜஸ்தான்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாலின
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாலின
அருகிலுள்ள விமான நிலையம்
உதய்பூர்