Friday Nov 15, 2024

ஸ்ரீ முன்னேஸ்வரம் கோவில், இலங்கை

முகவரி

ஸ்ரீ முன்னேஸ்வரம் கோவில், மகா ஆலயம், வாரியபொல சாலை, சிலாபம் 61000, இலங்கை தொலைபேசி: +94322224833

இறைவன்

இறைவன்: முன்னைநாதர் (சிவன்) இறைவி: வடிவாம்பிகா தேவி

அறிமுகம்

இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்தில் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற நகரில் இருந்து கிழக்கே, சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் சிலாபம்-குருநாகல் வீதியில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சிங்களவரும், தமிழரும் கலந்து வாழ்கின்றனர். இலங்கையில் உள்ள பழைமையான சிவன் கோயில்களில் காலத்தால் மிகவும் முற்பட்ட கோயில் ஆகும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. முன்னேசுவரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்று. இக்கோவில் பிரதேசத்தில் மொத்தம் ஐந்து கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒரு பௌத்தக் கோவிலும் உள்ளது. முக்கியமானதும், பெரியதுமான சிவன் கோவிலில் வடிவாம்பிகா சமேதராக முன்னைநாதர் (சிவன்) உள்ளார். இதனைத் தவிர பிள்ளையார் கோவில், காளி கோவில், மற்றும் ஐயனார் (சிங்களத்தில் ஐயநாயக்கர்) கோவில்களும் உள்ளன. இங்குள்ள காளி கோவிலில் பௌத்தர், கத்தோலிக்கர்களும் வழிபடுகின்றனர்.

புராண முக்கியத்துவம்

முன்னேஸ்வரர் ஆலயமானது 5 நிலை ராஜகோபுரத்துடன் விண்ணை நோக்கி கம்பீரமாய் நிற்கிறது. ஆலயத்தின் எதிரே தல விருட்சத்தின் அடியில் நாகர் சிலைகள் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என ஒருங்கே அமைந்துள்ளன. கருங்கற்களால் ஆன இவை, விஜயநகர மன்னர் காலத்தில் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது. கருவறை விமானம் 46 அடி உயரம் கொண்டது. மூன்று தளங்களைக் கொண்டு கண்டி மன்னனால் எழுப்பப்பட்டுள்ளது. புறக்கோட்டங்களில் நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மன், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோரது சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. இது தவிர, விநாயகர், சுப்பிரமணியர், மகாவிஷ்ணு, நவக்கிரகம், பைரவர், துர்க்கை லட்சுமி, சரஸ்வதி, நரசிம்மர், சரபேஸ்வரர், அனந்த சயனர் திருமேனிகளும் காணப்படுகின்றன. ஆலயத்தின் நடுநாயகமாக முன்னேஸ்வரர், சதுர வடிவ ஆவுடையாரில் பெரிய வடிவில் கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். இவரின் இடதுபுறம் அன்னை வடிவாம்பிகையின் எழில் கொஞ்சும் உலாத் திருமேனி அமைந்துள்ளது. கருவறை வெளியே தென்திசை நோக்கி, அன்னை வடிவாம்பிகை எளிய வடிவில் பெயருக்கு ஏற்றாற்போல் வடிவழகியாய் அருள் வழங்குகின்றாள். வடிவாம்பிகையின் உலோகத் திருமேனி பழமையானதாகவும், கலைநயம் கொண்டதாகவும் விளங்குகிறது. இதன் எதிரே ஸ்ரீசக்கர எந்திரம் அமைந்துள்ளது. இது சிவலிங்கத்திற்கு இடதுபுறம் அமைந்துள்ளது. இதற்கு ஒரு புராணக் கதை உண்டு. மீனவர் ஒருவர் மீன் பிடிக்க சென்றபோது, அங்கே சிறுவனும் சிறுமியும் விளையாடிக் கொண்டிருந்தனர். மீனவனைக் கண்டதும் அவர்கள் மாயமாக மறைந்தனர். மறுநாள் மீனவர் கையில் சிறுமி சிக்கினாள். ஆனால் மறுநொடியே அவர் தங்கச் சிலையாகிப் போனாள். மீனவன் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தான். இதையறிந்த மன்னன், அந்த சிலையைக் கைப்பற்றி, அதேபோல பல சிலைகளைச் செய்து, மீனவனை அழைத்து ‘இதில் உன்னுடைய சிலை எது?’ என்று கேட்டான். ஒரு நாள் அவகாசம் கேட்டான் மீனவன். அன்று அவனது கனவில் அன்னை வடிவாம்பாள் தோன்றி, ‘கால் அசையும் சிலையே நான்’ எனக் கூறி மறைந்தாள். மறுநாள் சரியாக அடையாளம் காட்டினான், மீனவன். அந்தச் சிலையே இத்தலத்தின் கருவறையில் இருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது. இந்தக் கோவிலில் உற்சவத் திருமேனிகளாக விநாயகர், சுப்பிரமணியர், ஆறுமுகசுவாமி, சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், மகாமாரி, பிரதோஷ மூர்த்தி, பிரமாண்ட பிட்சாடனர், சண்டேஸ்வர நாயனார், அறுபத்துமூவர் போன்றவை உள்ளன. இவ்வாலயத்தின் தலமரம் அரச மரம் ஆகும். கோவிலின் வடக்கே ஓடும் மாயவனாறு தலத் தீர்த்தமாக அமைந்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன முறையாய் அமைந்த இத்திருத்தலம் அழகேசுவரம் எனவும் வழங்கப்படுகின்றது. முன்னேசுவரம் கோயில் இலங்கையில் உள்ள ஐந்து பெரும் சிவாலயங்களில் (ஈசுவரங்களில்) ஒன்று. இக்கோயிலில் மக்கள் இன, சமய, மொழி வேறுபாடின்றி வழிபட்டு வருகின்றனர் இக்கோவில் பிரதேசத்தில் மொத்தம் ஐந்து கோவில்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஒரு பௌத்தக் கோவிலும் உள்ளது. முக்கியமானதும், பெரியதுமான சிவன் கோவிலில் வடிவாம்பிகா சமேதராக முன்னைநாதர் (சிவன்) உள்ளார். இதனைத் தவிர பிள்ளையார் கோவில், காளி கோவில், மற்றும் ஐயனார் (சிங்களத்தில் ஐயநாயக்கர்) கோவில்களும் உள்ளன. இங்குள்ள காளி கோவிலில் பௌத்தர், கத்தோலிக்கர்களும் வழிபடுகின்றனர் மேலும் இக்கோவில் சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

திருவிழாக்கள்

ஆவணி பவுர்ணமியை முடிவாகக் கொண்டு, 27 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மாசியில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். விஷ்ணு திருவிழா, தீமிதி விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பவுர்ணமியை முன்னிட்டு பர்வயந்திர பூஜையும் நடக்கிறது. இது தவிர, ஏனைய சிவாலய வழிபாடுகள் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

காலம்

11 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முன்னேஸ்வரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிலாபம்

அருகிலுள்ள விமான நிலையம்

கொழும்பு

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top