வேலம்புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
வேலம்புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் சிவன்கோயில் தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609306.
இறைவன்
இறைவன்: தான்தோன்றீஸ்வரர்
அறிமுகம்
திருவிளையாட்டம் அருகில் உள்ள அரும்பாக்கம் பாலத்தில் இருந்து ஒரு கிமீ. தூரத்தில் தான் உள்ளது இந்த வேலம்புதுக்குடி. சிவன் கோயில் எங்கிருக்கு என சில வருடங்களின் முன்னம் கேட்டிருந்தால் சாலையோர குளத்தினை காட்டியிருப்பார்கள்!! ஆம் சில நூற்றாண்டுகளின் முன்னம் படையெடுப்பில் இடித்து தூக்கியெறியப்பட்ட பல இந்து கோயில்களில் ஒன்று தான் இந்த வேலம்புதுக்குடி சிவன்கோயில். உடைக்கப்பட்ட சிலைகள் குளத்தில் தூக்கி வீசப்பட்டிருந்தன. காலசக்கரம் சுழலும்போது கீழிருந்தவை மேலெழுவது தானே இயல்பு. அப்படி சில வருடங்களின் முன்னர் தன்னை தானே வெளிக்காட்டிக்கொண்டவர்தான் இக்கோயில் இறைவன் தான்தோன்றீஸ்வரர். கிடைத்ததென்னவோ ஒரு லிங்க பாணன், அதன்சதுர மேல்பகுதி ஆவுடை மற்றும் அழகு தேவதையாக காட்சி தரும் அம்பிகையின் தலைப்பாகம். சாலையோர பெரிய அரசமரத்தின் கீழ் இறைவனும் இறைவியும் உள்ளனர் அவர்களுக்கு தகர கொட்டகை ஒன்றுருவாக்கப்பட்டுள்ளது. எதிரில் நந்தி தேவர். கட்டை சுவற்றில் ஒரு விநாயகரும் ஒரு முருகனும். வடபுறம் கிழக்கு நோக்கி சலசலக்கும் வீரசோழன் ஆறு. தெற்கில் பெரிய குளமொன்று. எளிமையான கோயில், எளிமையான பூஜைகள், எளிமையான பஞ்சாட்சர மந்திரம், செய்பவரும் எளிமையானவர்தான். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேலம்புதுக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி