வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், சிவகங்கை
முகவரி
வேம்பத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் கோவில், வேம்பத்தூர், சிவகங்கை மாவட்டம் மொபைல்: +91 97903 25083
இறைவன்
இறைவன்: கைலாசநாதர் இறைவி: ஆவுடைநாயகி
அறிமுகம்
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. சங்க காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் பிறந்த இடம் என்ற பெருமை வேம்பத்தூருக்கு உண்டு.
புராண முக்கியத்துவம்
மதுரையை ஆண்ட மலையத்துவஜ பாண்டியன் பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்தினார். இதற்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். யாகம் செய்யும் முன் வடநாட்டுக்கு யாத்திரை சென்று கயிலாயத்தை தரிசித்து வரும்படி அந்தணர்கள் ஆலோசனை கூறினர். அதற்காக, தன் மனைவி காஞ்சனமாலையுடன் கிளம்பினார். செல்லும் வழியில், மனமே கயிலாயம் என்று அசரீரி ஒலித்தது. இதுகேட்டு, பாண்டியனின் மனமும் சிவ சிந்தனையில் லயித்தது. அங்கேயே சிவபெருமானை வழிபட்டு கைலாயத்தை தரிசித்த பலனைப் பெற்றார். அந்த இடத்தில் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் சிவன் எழுந்தருளினார்.
நம்பிக்கைகள்
சுவாமியும், அம்பாளும் புத்திரதோஷம் போக்குபவராக விளங்குகின்றனர். இங்கு திருமணம் செய்யும் தம்பதியருக்கு முதல் குழந்தை ஆண்குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
தமிழ் மணக்கும் ஊர்: தமிழ்த்தாத்தா உ.வே.சா., இலக்கியங்களைத் தொகுக்கும் போது, இலக்கியச் சுவடிகளைத் தேடி இவ்வூருக்கு வந்திருக்கிறார். செய் என்பதற்கு வயல் என்பது பொருள். இங்கு கம்பர் செய், கூத்தன் செய், பரணர் வாய்க்கால், காளமேகத் தார், அவ்வை திடல் என்று புலவர்களின் பெயர்களில் இடங்கள் இன்றும் உள்ளன. வேம்பத்தூர் குமணனார், கண்ணன் கூத்தனார் போன்ற சங்க புலவர்கள் இவ்வூரை சேர்ந்தவர்கள். இதோ என் வளையல்: வேம்பத்தூரில் கவிராஜபண்டிதர் என்னும் பக்தர் அம்பிகையை உபாசித்து வந்தார். இவர் ஒருமுறை காசி கிளம்பினார். அவருடைய மகளும் உடன் சென்றாள். பாதிவழியில், அம்பாளே அவரது மகளாக உடன் சென்றாள். நிஜமகள் வீட்வீ டுக்கு வந்துவிட்டாள். யாத்திரையின் போது, மகளுக்கு கைநிறைய வளையல் வாங்கிக் கொடுத்தார். ஆனால், ஊருக்கு திரும்பும் போது, மகளாக வந்த அம்பிகை மறைந்துவிட்டாள். உண்மை மகளிடம்,நான் வாங்கிக் கொடுத்த வளையல் எங்கே? என்று கேட்டார். ஆனால் அவளோ, எனக்கு எப்போது வளையல் வாங்கித் தந்தீர்கள்? என்று கேட்டாள். அப்போது, அம்பிகை, இதோ இருக்கிறது வளையல்! என்று கையசைத்து மறைந்தாள். அம்பிகையே தன்னுடன் காசி வந்ததை அறிந்த கவிராஜ பண்டிதர் வியப்பில் ஆழ்ந்தார். இவர் ஆதிசங்கரர் எழுதிய சவுந்தர்ய லஹரியைத் தமிழில் மொழிபெயர்த்தார். வேம்பத்தூரில் இருந்து 40கி.மீ., தொலைவில் வீரவீசோழத்தில் இவருக்கு ஜீவச ஜீ மாதி உள்ளது. அதனை ஐயர் சமாதி என்று குறிப்பிடுகின்றனர்.
திருவிழாக்கள்
பிரதோஷம், சிவராத்திரி
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேம்பத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை