வேப்பந்தாங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
வேப்பந்தாங்குடி கைலாசநாதர் சிவன்கோயில்,
வேப்பந்தாங்குடி, திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
சிவகாமசுந்தரி
அறிமுகம்:
திருவாரூரின் தெற்கில் திருத்துறைபூண்டி சாலையில் 13 கிமில் உள்ள மாவூர் பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் திரும்பும் சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் வேப்பந்தாங்குடி. இறைவன் லிங்க வடிவினனாக வேம்பின் கீழ் அமர்ந்ததால், வேம்பின் கீழ் அமர்ந்தான் குடி எனப்படுகிறது. வெள்ளையாற்றிலிருந்து பிரியும் சித்தாறு இக்கிராமத்தின் வழியே பாய்கிறது பெரும் வயல்வெளிகளின் நடுவில் உள்ளது கிராமம். பெரிய குளத்தின் கரையில் பெருமாள் கோயிலும், ஊரின் வடகிழக்கில் மற்றொரு பெரிய குளத்தின் கரையில் சிவன்கோயிலும் உள்ளன.
இறைவன் –கைலாசநாதர் இறைவி சிவகாமசுந்தரி
கிழக்கு நோக்கிய கருவறையில் இறைவனும் தெற்கு நோக்கிய கருவறையில் அம்பிகையும் உள்ளனர். இறைவன் கருவறை வாயிலில் அழகிய விநாயகரும் முருகனும் உள்ளனர். இறைவன் முன்னர் உள்ள முகப்பு மண்டபத்தில் நந்தி உள்ளார். கருவறை கோட்டங்கள் என ஏதுமில்லை. தனி மாடத்தில் தென்முகனும், வடபுறத்தில் துர்க்கை தனி மாடத்தில் உள்ளனர். ஊர் பெயரின் காரணத்திற்க்கேற்ப கருவறையில் பின்புறம் பெரியதொரு வன்னியும் வேம்பும் செழித்து வளர்ந்துள்ளன. இப்போது நாம் காண்பது சமீப கால கட்டுமானமாக உள்ளது. கைலாசநாதர் கோயில் என்றாலே ஆயிரம் வருடங்கள் பழமையானது என கொள்ளலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வேப்பந்தாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி