வீரமங்கலம் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
வீரமங்கலம் சிவன்கோயில் வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612701
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
வீரமங்கலம்; இவ்வூர் கும்பகோணத்தில் இருந்து 20கிமீ, தூரத்தில் உள்ளது, பட்டீஸ்வரம் – ஆவூர் வழி அம்மாபேட்டை சாலையில் வந்தால் வெட்டாறு குறுக்கிடுகிறது அந்த இடத்தில் பாலத்தை தாண்டாமல் வலது புறம் ஆற்றின் கரையில் மூன்று கிமீ. சென்றால் வீரமங்கலம். வெட்டாற்றின் வடகரையில் உள்ளது இந்த சிற்றூர். சிதம்பரம் நடராஜர் கோயிலின் நித்திய நைவேத்ய கட்டளைக்கு என நிலம் ஒதுக்கப்பட்ட ஊர் இதுவாகும். வீரராஜேந்திரனால் கோயில் நிபந்தமாக கொடுக்கப்பட்ட ஊராதலால் அவரது பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திரிந்து வீரமங்கலம் ஆகியுள்ளது. இம்மன்னரது ஆட்சிக்காலம் 11ம் நூற்றாண்டு இவ்வூரில் கிழக்கு நோக்கிய பெரிய சோழர்கால கற்றளி இருந்துள்ளது, கால மாற்றத்தால் சிவவழிபாடு செய்யும் மக்கள் குடிபெயர்ந்துவிட கோயில் சிதைந்துபோனது. கருவறை கல் நன்றாக துணிகளை துவைக்கும் என்பதால் குளங்களின் ஓரத்தில் கிடக்கின்றது. பிரகாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பள்ளிக்கூடம், சத்துணவுகூடம் என மாறிவிட்டன. சிவன் சொத்து ஆளுக்கொருகை அள்ளிதின்போம் என அனைத்து துறைகளும் கேட்பாரின்றி கட்டி தள்ளிவிடுகின்றன. ஆறுதலாக இருப்பது என்னவெனில் அரசு கட்டிடங்கள் பத்து வருடங்களுக்கு மேல் நிற்ப்பதில்லை எனபது தான். சிலவருடங்களின் முன்னர் இருக்கும் லிங்கத்திற்கு அம்பிகைக்கும் சிறிய அளவிலான கருவறைகளை கட்டிவிட்டு உள்ளே வைத்ததுடன் பணிகள் நின்றுவிட்டன. ஒருகாலத்தில் குவித்த கை விரியாது வணங்கப்பட்ட சோழர்கால சிலைகள் இன்று காட்சிபொருளாகிப்போனது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வீரமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி