Thursday Dec 26, 2024

விஜயமங்கலம் சமணக்கோவில்

முகவரி

விஜயமங்கலம் சமணக்கோவில், விஜயமங்கலம், ஈரோடு மாவட்டம் – 638056

இறைவன்

இறைவன்: சந்திரபிரபா (தீர்த்தங்கரர்)

அறிமுகம்

விஜயமங்கலம் சமணக்கோவில், ஈரோடு மாவட்டத்தின் எல்லைப்பகுதியாக அமைந்திருக்கும் விஜயமங்கலம் பகுதிக்கு விஜயபுரி, செந்தமிழ் மங்கை என்றெல்லாம் பெயர் உண்டு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதி இது. கொங்கு நாடுகள் 24 ஆக பிரிக்கப்பட்டு இருந்தன. அதில் இந்த பகுதியும் ஒன்று. இங்குள்ள பஸ்திபுரம் என்ற பகுதியில் ஒரு கோவில் உள்ளது. மிகப்பழமையான இந்த கோவில் இந்து கோவில்களின் தோற்றத்தில் உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த கோவிலை நெட்டை கோபுரம் என்று அழைக்கிறார்கள். காரணம் பண்டைய காலம் முதல் மிகப்பெரிய ராஜகோபுரம் கொண்ட கோவிலாக இது உள்ளது. இந்த கோவில் கி.பி.3-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சமணகோவிலாகும். பின்னாளில் சாமுண்டராயன் என்பவரும், சோழ மன்னர்களும் கோவில் பணிகள் செய்து உள்ளனர். சமண தீர்த்தங்கரர்களில் 24-வது தீர்த்தங்கரரான சந்திரபிரபா இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. விஜயமங்கலம் கோவில் ஒரு காலத்தில் தமிழ்ச்சங்கமாக திகழ்ந்தது. சமண மதம் என்பது வடநாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்தது. அதுவும் சந்திரகுப்த மௌரியர், அவரது குரு பத்திரபாகுவுடன் தென் இந்தியாவில் 3 ஆயிரம் சீடர்களுடன் வந்து சமண மதத்தை போதித்தார். அப்போது தமிழகத்துக்கு வந்த சமணர்கள் தமிழ் மொழியை கற்றுத் தேர்ந்தனர். இதன் மூலம் தமிழுக்கு பல நூல்கள் கிடைத்தன. நிகண்டுகள், காப்பியங்கள், இலக்கண-இலக்கிய புத்தகங்கள் கிடைத்தன. அப்படி இயற்றப்பட்ட ஒரு காப்பியம்தான் பெருங்கதை. இந்த காப்பியத்தை இயற்றியவர் கொங்குவேளிர் என்பவர். இவர் வடநாட்டு மொழியான பைசாச மொழியில் உதயணன் வரலாற்றை கூறும் ஸ்ரீபிருகத்கதா என்னும் காப்பியத்தை, தமிழில் பெருங்கதை என்ற பெயரில் நூலாக எழுதினார்.

காலம்

6 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விஜயமங்கலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விஜயமங்கலம்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top