விசலூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
விசலூர் அகத்தீஸ்வரர் திருக்கோயில்,
விசலூர், கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612402.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
விசலூர் இவ்வூர் கும்பகோணத்தின் தெற்கில் உள்ள திப்பிராஜபுரம் தாண்டியவுடன் முடிகொண்டான் ஆற்றின் தென் கரையில் கிழக்கு நோக்கி இரண்டு கிமீ தூரத்துக்கும் குறைவான தூரத்தில் விசலூர் உள்ளது. விசல்யபுரம் என முற்காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூர் இப்போது விசலூர் எனப்படுகிறது. விசித்ரவிசு எனும் முனிவர் வழிபட்ட தலம் என்பதால் விசு – நல்லூர் எனப்பட்டு பின்னர் விசலூர் என ஆனதாகவும் கூறுவார். இவ்வூரில் இரு சிவாலயங்களுள்ளன.
முடிகொண்டான் கரையில் ஒன்று இவ்வூரின் தெற்கில் ஓடும் திருமலை ராஜன் ஆற்றின் வடகரையில் ஒன்றுமாக உள்ளன. முடிகொண்டான் ஆற்றின் கரையில் உள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், இக்கோயிலுக்கு சற்று முன்னதாக பெருமாள் கோயிலை ஒட்டி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. அகத்திய மாமுனி தென் திசை நோக்கி செல்லும்போது பல தலங்களை வழிபட்டார், அதில் ஒன்று இக்கோயில். இக்கோயில் பழமையான சோழர்கால கட்டுமானம் கொண்டது தான். பல காலமாக சிதைவடைந்து கிடந்த இக்கோயில் சமீபத்தில் தான் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு கண்டது.
இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அவரின் இடதுபுறம் அம்பிகையும் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இது ஒரு திருமணகோலகாட்சி என்று சொல்வர், இதனால் மணம் முடித்த தம்பதியர் இங்கு வந்து வழிபட தம்பதிகளுக்குள் நல்ல இணக்கமும், மணமக்கள் தீர்க்காயுளுடன் வாழ்வர். இறைவன் – அகத்தீஸ்வரர் இறைவி- அகிலாண்டேஸ்வரி இரு கருவறைகளின் முன்னர் நீண்ட சிமென்ட் மண்டபம் ஒன்று தற்போது கட்டப்பட்டுள்ளது. இதில் சிறிய சுப காரியங்களை செய்துகொள்ளவும் ஏதுவாக இருக்கும். இறைவனின் கருவறை கோட்டத்தில் மகர தோரணத்தின் கீழ் மன்னர் ஒருவர் கை கூப்பிய நிலையில் காணப்படுகிறார். அவர் யாரென அறிய இயலவில்லை,
கருவறை கோட்டங்கள் காலியாக உள்ளன. தென்முகன் உள்ள பகுதியில் சனகாதி முனிவர்கள் சற்று சிதைந்த நிலையில் உள்ளனர். கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல்லில் ஆனது ஆனால் திருப்பணி செய்தவர்கள் கருங்கல் மேல் வண்ண பூச்சு செய்துள்ளனர். அதிட்டான பகுதியும் சற்றே மண்ணில் புதையுண்டே காணப்படுகிறது. கோயில் ஊர் பகுதியில் இருந்து நீண்ட தூரம் தள்ளி இருப்பதால் மக்கள் சிறப்பு நாட்களில் மட்டுமே வருகின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விசலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி