Sunday Nov 24, 2024

வாலாஜாபாத் அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

வாலாஜாபாத் அருணாசலேஸ்வரர் சிவன்கோயில், வாலாஜாபாத் காஞ்சிபுரம் மாவட்டம் – 603 201.

இறைவன்

இறைவன்: அருணாசலேஸ்வரர் இறைவி : அபித குஜாம்பாள்

அறிமுகம்

தாம்பரம்- காஞ்சி சாலையில் உள்ளது வாலாஜாபாத்.ரயில் நிலையமும் உண்டு. இத்திருக்கோயிலில் உறையும் ஈசன் திருநாமம் / ஸ்ரீ அருணாசலேஸ்வரர் . அம்பாள் அபித குஜாம்பாள். கோஷ்டத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மட்டும் உள்ளது. மற்ற சிலைகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. பைரவர் மற்றும் சனீஸ்வரன் சன்னதிகள் இருக்கின்றன. புதிதாக அஷ்டபுஜ துர்கை வைத்துள்ளார். ஆலயம் தற்போது சீர் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளது. இங்குள்ள இறைவனை தொடர்ந்து வேண்டி வழிபட்டு வந்தால் ஊனமுற்றவர் நலமடைய வாய்ப்புண்டு. இங்கு பூஜை செய்யும் திரு ஸ்ரீதர் ஒரு விபத்தில் நடக்க முடியாத நிலையில் தினசரி தவழ்ந்து வந்து தொடர்ந்து ஸ்வாமிக்கு பூஜை செய்துள்ளார். சில காலம் சென்று அவரது கால்கள் சரியாகி தற்போதும் பூஜை செய்து வருகிறார். நவாப் காலத்தில் படை வீரர்களால் திருப்பணி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. கோயில் தல விருட்சம் வன்னி. இரு வேளை பூஜை நடைபெறுகிறது. கோயில் நேரம் காலை 6-10 மாலை 6-8. தொடர்புக்கு திரு ஸ்ரீதர்- 9677452640, திரு செல்வராஜ்-9381074640, திரு ராஜேஷ் -9445735266.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வாலாஜாபாத்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வாலாஜாபாத்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top