Sunday Nov 24, 2024

வலசை சிவன் கோயில், கடலூர்

முகவரி

வலசை சிவன்கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம்

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

வலசை போதல் என்பது புலம் பெயர்தலை குறிக்கும் சொல்லாகும். மக்கள் புலம்பெயர்ந்து இங்கு தங்கிய காரணத்தினால் இந்த பெயர் வந்திருக்கலாம். கடலூர் மாவட்டத்தின் வடமேற்கு எல்லை கிராமம் இதுவாகும். மங்கலம்பேட்டை- இடைசித்தூர் வலசை என வரவேண்டும். முந்நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த செங்கல் கட்டுமான கோயில், அரை ஏக்கர் பரப்பளவில் கோயிலும் அதன் வடகிழக்கில் ஒரு ஏக்கர் கொண்ட திருக்குளமும் உள்ளது. ஊருக்கு இளைத்தவன் சிவன் தான் தற்போது, அதனால் கோயிலுக்கும் குளத்திற்கும் நடுவே ஒரு நடுநிலைப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. சிவ வழிபாடு செய்யும் சிறுபான்மை மக்கள் ஊரைவிட்டு சென்றுவிட கோயில் சிதைந்து கொண்டிருக்கிறது. கிழக்கு நோக்கிய இறைவன் அருகில் இடப்பாகம் கொண்டாற்போல அம்பிகையும் இடதுபுறம் கிழக்கு நோக்கிய தனி கோயிலில் உள்ளார். இறைவனது கருவறை பல சுண்ண சுதைகளால் நிறைம்பி உள்ளது. தென் புறம் தட்சணாமூர்த்தி மட்டும் சற்று முன்னிழுக்கப்பட்ட மண்டபத்தில் காட்சி தருகிறார். விநாயகர், முருகன் தனி சிற்றாலயங்களில் உள்ளனர். வடகிழக்கு மூலையில் ஓர் தரைமட்ட கிணறும், மேற்கு நோக்கிய சனி பகவானும், பைரவர், சூரியனும் உள்ளனர். இறைவனுக்கு நேர் எதிரில் நீண்ட இடைவெளி கொண்டு நந்தி மண்டபம் உள்ளது அற்ப்புதமாய் வடிவமைக்கப்பட்ட நந்தியின் சிலை உள்ளது. சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற பெரு விழா நாட்களில் மட்டுமே இறைவன் பூஜிக்கப்படுகிறார். உழவார பணி அன்பர்கள் இதுபோன்ற உள்ளடங்கிய கிராமத்திற்கு சென்று அங்கே சிவன் பெருமை பேசி தொடர் பூஜைகள் நடத்திட, ஊக்கமேற்படுத்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இடச்சித்தூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top