Monday Nov 25, 2024

வலங்கைமான் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :

வலங்கைமான் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் – 612804.

இறைவன்:

காசிவிஸ்வநாதர்

அறிமுகம்:

 ஊரின் மையத்தில் உள்ளது காசிவிஸ்வநாதர் கோயில். இது சைவசெட்டியார்கள் குடும்பம் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து நிர்வகிக்கும் கோயிலாகும். இறைவன் காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார். கோயிலின் நேர் எதிர் வீதி காசிவிஸ்வநாதர் தெரு எனப்படுகிறது. இறைவி சன்னதி தெற்கு நோக்கி தனி கோயிலாக உள்ளது. இறைவன் முன்னர் நந்தி ஒரு மண்டபத்தில் உள்ளார். கூம்பு வடிவ மண்டபங்கள் கொண்டுள்ளதாலும் தற்போது எட்டாவது வாரிசுகள் நிர்வகிப்பதாலும் 300 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம். கருவறை வாயிலில் உள்ள கை கூப்பிய நிலையில் உள்ள சிலையை அவர்களது முன்னோராக காட்டுகின்றனர். ஆனால் அது ஒரு சோழ மன்னனின் சிலைபோல தெரிகிறது.

கருவறையின் முன் உள்ள முகப்பு மண்டபத்தில் இடதுபுறம் விநாயகர் உடன் ஒரு நாகரும் உள்ளனர். கருவறை விமானம் உயர்ந்து அழகாக உள்ளது. கோஷ்டங்களில் தென்முகன் உள்ளார், சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். சண்டேசர் வழமையாக இடத்தில் அமர்ந்துள்ளார். லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் ஒரு சிரிக்கும்புத்தர் எனப்படும் ஒரு பொம்மையை வைத்துள்ளது ஆகம விதிமீறல் என அறியாத நிர்வாகிகள். வடகிழக்கில் உள்ள பைரவர் சூரியன் சந்திரன் சன்னதி மாடங்களில் பழந்துணிகள் அடைந்து கிடக்கின்றன. வேண்டாத தட்டுமுட்டு சாமான்கள், ஒட்டடை படிந்த விதானங்கள், மாலை கட்டி உதிர்ந்த நார்களும் பூக்களும் கூடுதல் குப்பைகளாக கிடக்கின்றன. 15 வருடங்களின் முன்னர் இவ்வூரை சேர்ந்த தம்பதியரின் கனவில் சமயபுரம் மாரி வந்து இக்கோயில் திருப்பணியை மேற்கொள்ளுமாறு கூற, பல பெருந்தகைகள் உதவியால் 2007ல் குடமுழுக்கு கண்டுள்ளது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வலங்கைமான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top