வரவுக்குடி விஸ்வநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
வரவுக்குடி விஸ்வநாதர் சிவன்கோயில்,
வரவுக்குடி, சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609117.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
வைத்தீஸ்வரன் கோயிலின் வடக்கில் மூன்று கிமீ தூரத்தில் புங்கனூர் வழி சென்றால் வரவுக்குடி அடையலாம். உப்பனாற்றின் வடகரையில் இவ்வூர் அமைந்துள்ளது. இதில் ஆற்றுப்பாலத்தினை ஒட்டி கிழக்கு நோக்கிய விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறையும் தெற்கு நோக்கிய கருவறை கொண்ட இறைவியும் இருந்த கோயில் இது!! ஆனால் இன்றோ இது ஒரு செங்கல் குவியலாக உள்ளது. கருவறை முகப்புமண்டபம் என அனைத்தும் விரிசல் அடைந்து, செடி முளைத்து வேர்கள் சுவர்களை பிளந்து பாழ்பட்டு கிடக்கிறது சிற்றாலயங்களும் அப்படியே உள்ளே சென்று பார்க்க அச்சமாக இருக்கிறது. விஸ்வநாதர் விசாலாட்சி முருகன் என உள்ளே இருந்த மூர்த்திகள் அனைத்தும் எதிரில் உள்ள ஐயனார் கோயிலின் முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வரவுக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி