வடகரைஆலத்தூர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
வடகரைஆலத்தூர் சிவன்கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614302
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பாபநாசம் – திருக்கருகாவூர் சாலையில் உள்ள வெட்டாற்றினை தாண்டாமல் கிழக்கு நோக்கி அதன் வடபுறகரையில் செல்லும் ஊத்துக்காடு சாலையில் 4 கி.மீ. பயணித்தால் வடகரைஆலத்தூர் உள்ளது. ஆற்றின் தென் கரையில் தென்கரைஆலத்தூர் உள்ளது. ஆலமரங்கள் அடர்ந்த கரையோர கிராமம் எனபதால் இப்பெயர் வந்திருக்கலாம். இதில் வடகரை ஆலத்தூரில் ஒரு சிவாலயம் இருந்து ஆற்று வெள்ளத்தில் போய்விட்டதாக கூறுகின்றனர். அதில் இருந்த மூலவரையும் நந்தி சிலையை மட்டும் பிற்காலத்தில் எடுத்து வைத்து ஒரு தகர கொட்டகையில் வைத்து பூஜிக்கின்றனர். கம்பீரமான ஆலங்காட்டீசர்; பெரிய நீண்டுயர்ந்த பாணம் கொண்டுள்ளார். ஊரில் விநாயகர், பெருமாள், திரௌபதி கோயில்கள் நல்ல நிலையில் விளங்குகின்றன. ஈசனையும் அழகிய ஆலயத்தில் இருத்திப் பார்க்கவேண்டும். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 – 1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வடகரைஆலத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி