லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி திருக்கோயில், (கெரடி கோயில்), கோயம்புத்தூர்
முகவரி
அருள்மிகு லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி திருக்கோயில், (கெரடி கோயில்) ப.எண்:987, பு.எண்: 546 பெரிய கடைவீதி, கோயம்புத்தூர் – 641001. போன்: +91 94873 73550
இறைவன்
இறைவன்: லட்சுமி நாராயணர், வேணுகோபால சுவாமி
அறிமுகம்
இக்கோயில் கோயம்பத்தூரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது. கோயிலில் ஒரே கருவறையில் இரண்டு பெருமாள்கள் வீற்றிருப்பது சிறப்பு. இக்கோயிலை கெரடி கோயில் என்று அழைக்கப்படுகிறார்கள். கோயில் தெற்கு நோக்கியும், மூலவர் தெற்கு நோக்கியும் உள்ளார். கிழக்கு நோக்கி சக்கரத்தாழ்வாரும், மேற்கு நோக்கிஹயக்கீரிவரும் அமைந்துள்ளனர். அத்துடன் ஆண்டாள், அனுமன், சக்கரத்தாழ்வார், கருடன், ராமானுஜர், சன்னதிகளும் உண்டு.
புராண முக்கியத்துவம்
கோயில் கடந்த, 1700ம் ஆண்டுகளில் மைசூர் மன்னர் தனது பாதுகாவலர்களான ஜெட்டி சமூகத்தினர் வழிபடுவதற்காக ஏற்படுத்தினர். பின் அச்சமூகத்தினரால் பரிபாலனம் செய்ய முடியாததால், துருவ வேளாளர் சமூகத்தை சேர்ந்த (ஆணை குந்தா, கர்நாடகா) குட்டி கவுண்டர், வையாபுரிக் கவுண்டர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கோயிலை தற்போதுள்ள நிலைக்கு உயர்த்தியுள்ளனர். அவர்களின் வாரிசுகள் பரம்பரை வாரிசுகளாக, அறங்காவலர்களாக நிர்வகித்து வருகின்றனர்.
நம்பிக்கைகள்
திருமணம் நடக்கவும், குழந்தை வேண்டியும், கல்வி சிறக்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக பெருமாள் தெற்கு நோக்கி உள்ளதால் சிறப்பு. ஒரே கருவறையில் இரு மூலவர்கள் வீற்றிருப்பது தனிச் சிறப்பு. லட்சுமி நாராயணரும், வேணுகோபால சுவாமியும் மூலவர்களாக உள்ளனர்.
திருவிழாக்கள்
வைகுண்டஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், உத்ராயண புண்ணிய காலம், தசட்நாயண புண்ணிய காலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
காலம்
1700 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்