மொக்கணீசுவரம் மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கோயம்பத்தூர்
முகவரி
மொக்கணீசுவரம் மொக்கணீஸ்வரர் திருக்கோயில், மொக்கணீசுவரம், திருமலைக் கவுண்டன் பாளையம், வேமாண்டன்பாளையம் (வழி), அவிநாசி வட்டம், கோயம்பத்தூர் மாவட்டம் – 638462
இறைவன்
இறைவன்: மொக்கணீஸ்வரர்
அறிமுகம்
மொக்கணீசுவரம் மொக்கணீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அவிநாசி-அந்தியூர் சாலையில் உள்ள வைப்புத்தலமான சேவூரை அடுத்து 1 கிமீ தொலைவில் குட்டகம் என்னுமிடத்தில் பிரியும் இடப்புறச் சாலையில் 6ஆவது கிமீ தொலைவில், தண்ணீர்ப்பந்தல் பாளையம் என்னும் ஊரையடுத்து, சாலையோரத்தில் இக்கோயில் உள்ளது. கோயில் அமைந்துள்ள இடத்தில் ஊர் எதுவும் இல்லை. ஒரு பண்ணை வீடு மட்டுமே உள்ளது. கோயில் பெயர்ப்பலகையும் காணப்படவில்லை. அவிநாசி-புளியம்பட்டி நகரப்பேருந்து இந்த ஊர் வழியாகச் செல்கிறது. இக்கோயிலின் மூலவராக மொக்கணீசுவரர் உள்ளார். சுந்தரரால் பாடப்பெற்ற இந்த வைப்புத்தலமானது முழுமையாக அழிந்துபோனது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் “மொக்கணி அருளிய…” எனக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனடிப்படையில் இக்கோயில் மீண்டும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறைவி மீனாட்சி தெற்கு நோக்கிய நிலையில் தனி சன்னதியில் உள்ளார். முன் மண்டபத்தில் மாணிக்கவாசகர் காணப்படுகிறார். சிறிய கோயிலாக உள்ளது. கோலில் நவக்கிரகம், பைரவர், தட்சிணாமூர்த்தி சன்னதிகள் உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்