மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், தூத்துக்குடி
முகவரி
மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், மேல்மாந்தை, தூத்துக்குடி மாவட்டம்- 604 202.
இறைவன்
இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி : மீனாட்சி
அறிமுகம்
பெரியகுளத்தின் கரையில் கிழக்கு நோக்கி கற்றலியாக அமைந்துள்ளது. கோயில் காலத்தை சரிவர அறியமுடியவில்லை. கற்றளியை வைத்து இது 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்கலாம். பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மேல்மாந்தையில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ தொலைவில் மேல்மாந்தை அமைந்துள்ளது. மேல்மாந்தையில் உருவான முதல் ஆலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகும். ஜமின் காலத்தில் மிகுந்த செல்வாக்குடனும் சீருடனும் திகழ்ந்தது. பற்பல இடங்களில் நிலபுலன்கள் இருந்தன. தற்போது ஆலயமும் அதனைச் சுற்றிய இடங்களும் மட்டுமே உள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமே ஆலயப் பராமரிப்புக்கு உதவுகிறது. ஆலயத்தில் வழிபாடுகள் காலையிலும், மாலையிலும் நடைபெருகின்றன. இவ்வாலயத்திற்கு இருவாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் நோக்கி சுந்தரேஸ்வரர் பீடமும் தெற்கு வாயிலை நோக்கி மீனாட்சியம்மன் பீடமும் அமைந்துள்ளது. இங்கு சிவன், மீனாட்சி, சுப்பிரமணியன், விநாயகர், சண்டிகேஸ்வரர், பைரவர், தட்சனாமூர்த்தி, முதலிய சிலைகள் உள்ளன.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேல்மாந்தை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தூத்துக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி