மேலவடுகக்குடி வசிஷ்டேஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி :
மேலவடுகக்குடி வசிஷ்டேஸ்வரர் கோயில்,
மேலவடுகக்குடி, நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609501.
இறைவன்:
வசிஷ்டேஸ்வரர்
இறைவி:
சொர்ணாம்பிகை
அறிமுகம்:
வடுகர் எனும் ஒரு இனக்குழு வசித்த இடம் தான் வடுககுடி. திருவீழிமிழலை எனும் தலத்தின் கிழக்கில் அரசலாறும், கீர்த்திமான் ஆறும் சேரும் இடத்தின் வடகரை தான் வடுககுடி ஆகும். திருவீழிமிழலை கிழக்கில் உள்ள கடகம்பாடி எனும் இடத்தில் அரசலாற்று பாலம் வழி வடுககுடி அடையலாம். முன்னொரு காலத்தில் ஆற்றோரம் பெரிய கோயிலாக இருந்த இக்கோயில் சிதைந்து விட இருந்த மூர்த்திகள் வெவ்வேறு இடங்களில் இடம்பெயர்ந்தன. அவை இருவேறிடங்களில் வைத்து வழிபடப்படுகின்றன. ஒரு லிங்கமூர்த்தியையும் நந்தியையும் மக்கள் ஊர் மையத்தில் வைத்து ஒரு தகர கொட்டகையில் வைத்து பூஜிக்கின்றனர். மற்றொன்று கீர்த்திமான் ஆற்றின் கரையில் உள்ளது. இப்போது அதனை பார்ப்போம்.
குறுகலான ஆற்றின் கரை வழி வடக்கு நோக்கி சென்றால் வலது புறம் சிறிய தகர கொட்ட்டகையில் பெரிய லிங்க மூர்த்தியாக இறைவனும், அம்பிகையும் அதே கொட்டகையில் தெற்கு நோக்கி உள்ளார். இறைவன்-வசிஷ்டேஸ்வரர் இறைவி – சொர்ணாம்பிகை இக்கோயில் வசிஷ்டர் பூஜித்ததாக கூறப்படுகிறது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார், அவரின் முன்னர் ஒரு நந்தியும் பலிபீடமும் உள்ளது. தெற்கு நோக்கி அம்பிகை அருகில் சிறிய சண்டேசர் மேற்கு நோக்கிய காலபைரவர் உள்ளனர். இறைவனின் பின்புறம் பாலவிநாயகர் பாலமுருகன் உள்ளனர். இதில் லிங்கம், பைரவர் சண்டேசர் மட்டும் பழமையானவர்கள். அருகாமை குடியிருப்பு மக்களால் தினசரி பூஜைகளும் பிரதோஷம் சதூர்த்தி என பூஜைகள் நடக்கின்றன.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலவடுகக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி