மேலபொன்பேத்தி சிவன்கோயில், காரைக்கால்
முகவரி :
மேலபொன்பேத்தி சிவன்கோயில்,
மேலபொன்பேத்தி, நெடுங்காடு கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609603.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
காரைக்கால் நகரம் / திருநள்ளாற்றின் வடக்கில் 6 கிமீ தூரத்தில் உள்ளது இவ்வூர். நெடுங்காடு சந்திப்பில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் கோட்டுச்சேரி சாலையில் சற்று தூரம் சென்று இடதுபுறம் திரும்பினால் உள்ளது பொன்பேத்தி கிராமம். பொன்பெற்றி என்பதே பொன்பேத்தி என ஆனது, ஆயினும் பொன்பெற்றி என்பதன் பொருள் என்னவென விளங்கவில்லை.
கிழக்கு நோக்கிய சிவன்கோயில் முகப்பில் ரிஷபவாகனகாட்சி சுதையுடன் கூடிய நுழைவாயில். நீண்ட ஒட்டுகொட்டகையில் நந்தி மண்டபம், கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை அதற்கு முன்னர் மகாமண்டபம் உள்ளது. அதில் கருவறை வாயிலில் விநாயகர் ஒருபுறமும் முருகன் வள்ளி தெய்வயானையுடன் மறுபுறமும் உள்ளனர். இறைவி தென்புறம் நோக்கியுள்ளார். பிரகாரத்தில் தென்புறம் நால்வர் சன்னதி உள்ளது. கருவறை கோஷ்டங்களில் தென்முகன் உள்ளார்.
வடக்கில் அஷ்டபுஜ துர்க்கை மகிஷனின் மேல் நின்ற கோலம் அழகுடையது. தென்மேற்கில் ஒரு மரத்தடியில் ஒரு லிங்கமூர்த்தி தனித்துள்ளார். கருவறையின் பின்புறம் முருகன் சன்னதியும் வடமேற்கில் தனி கோயிலாக பெருமாள் தேவியருடன் நின்றகோலம் கொண்டுள்ளார். எதிரில் கருடன். சண்டேசர் உள்ளார். வடகிழக்கில் நவக்கிரக மண்டபம், பைரவரும் சூரியனும் ஒரே மாடத்தில் உள்ளனர். ஒரு தீர்த்தகிணறும் உள்ளது. பின்னப்பட்ட தென்முகன் விஷ்ணு பூதேவி சிலைகள் தனித்து உள்ளன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலபொன்பேத்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி