மேலக்குறிச்சி சொக்கநாதர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
மேலக்குறிச்சி சொக்கநாதர் சிவன்கோயில்,
மேலக்குறிச்சி, வேப்பூர் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 606304.
இறைவன்:
சொக்கநாதர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
விருத்தாசலத்தின் மேற்கில் உள்ள வேப்பூர் கூட்டுரோடு எனும் இடத்தின் வடக்கில் ஓடும் கோமுகி ஆற்றின் கரையோரம் உள்ளது இந்த மேலக்குறிச்சி. காட்டுமயிலூர் வழி இவ்வூர் செல்ல எட்டுகிமீ. மேலக்குறிச்சி கிராமத்தின் மேற்கில் காப்புக்காடுகள் உள்ளன. அதன் துவக்கத்தில் இருபுறமும் சுடுமண் குதிரைகள் அணிவகுக்க நடுவில் உள்ளது சொக்கநாதர் கோயில் சிறிய வாயில் வழி நுழையும் இடத்தில் பெரிய துவார பாலகர்கள் உள்ளனர். வாயிலின் மேற்புறம் சிவன் ரிஷபாரூடராக சுதை ஒன்றுள்ளது.
சுற்றிலும் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட மதில் சுவர், நடுவில் பெரிய ஆத்தி மரம் அதன் எதிரில் உள்ள கருவறையில் மூலவராக லிங்கம் இல்லை அதற்க்கு பதில் சிறியவிநாயகர் நவகண்டசிற்பம் ஐயனார், பெண்தெய்வம் உள்ளது. ஆனால் எதிரில் சிவனுக்கு முன்னர் இருப்பது போல் நந்தி ஒன்று மண்டபத்தில் உள்ளது. அருகில் யானை சுதை ஒன்றும் உள்ளது. அருகில் சூலாயுதங்கள் பல நடப்பட்டுள்ளன. பிரகாரத்தில் ஒரு சிற்றாலயத்தில் விநாயகரும், அடுத்தாற்போல் வெட்டவெளியில் ஒரு லிங்கமும் அடுத்து முருகனின் சிற்றாலயமும் , வடகிழக்கில் நவகிரகங்களும் உள்ளன. பிரகாரத்தில் இருப்பவர்தான் சொக்கநாதர் போலிருக்கிறது. இதனை சிவாலயம் என கூற இயலாது, ஆனால் கருவறையில் இருக்கும் ஐயனார் போலிருக்கும் தெய்வத்தையும் அதனருகில் உள்ள பெண் தெய்வத்தையும் சொக்கநாதர் மீனாட்சி என்கின்றனர்.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலக்குறிச்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி