மேலகொண்டத்தூர் கைலாசநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/307312669_8007281832678190_1292360562241954928_n.jpg)
முகவரி :
மேலகொண்டத்தூர் கைலாசநாதர் சிவன்கோயில்,
மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609117.
இறைவன்:
கைலாசநாதர்
அறிமுகம்:
கொண்டத்தூர், வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை செல்லும் சாலையில் இரண்டு கிமீ சென்றவுடன் குறுமாணக்குடி சாலை பிரிகிறது. இதில் ஒரு கிமீ சென்றால் முதலில் வருவது இந்த கொண்டத்தூர். இந்த கொண்டத்தூர் மேலகொண்டத்தூர் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கிய சிவன் கோயில் ஒன்று உள்ளது. பெரியதொரு மேடான பகுதி இதில் கோயில் அமைந்துள்ளது. சுற்றிலும் மக்கள் குடியிருப்புகள், ஆனால் கோயில் மட்டும் பாழ்பட்டு கிடக்கிறது. இறைவன் கருவறையும் அம்பிகையின் கருவறையும் மட்டுமே மிச்சம், முகப்பு மண்டபத்தின் செங்கல் தூண் பகுதிகளே நிற்கின்றன. சமீப காலங்களில் கோயில் சுற்றுபுறங்களை, யாரோ ஒருவர் சுத்தம் செய்ததால் கோயில் வெளியில் தெரிகிறது.
புராண முக்கியத்துவம் :
கருவறைக்குள் வௌவால்கள் எச்சத்தின் வீச்சம் ஒரு பழமையான கோயில் என மூளைக்கு பதிவேற்றம் செய்கிறது. கருவறை விரிசல் இடையே கசிந்து வெளிவரும் வெளிச்சக் கீற்றுகள் விளக்குகளின் தீய்ந்து போன சுடர் வாசனை, ஆங்கே கொடியில் காய வைக்கப்படிருக்கும் பழந்துணிகளின் பூஞ்சாண கலவை வாசனை, உச்சி வெயில் முதுகு தோலை உரித்தாலும் மாறாப் புன்னகையுடன் ரிஷப தேவர் இறைவன் எதிரில் உள்ளார். இறைவன்- கைலாசநாதர் இறைவியின் பெயர் காமாட்சியாக இருக்கலாம். அழகிய சதுர வடிவபீடம் கொண்டு ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் அற்புதமான கம்பீரத்தன்மை கொண்டுள்ளார். அம்பிகையும் அவருக்கு ஈடு கொண்ட அழகுதான். கையில் அக்ஷர மாலையும், தாமரையும் கொண்டுள்ளார்.
அற்புதமான செங்கல் தளி விமான அழகை சொல்வதா, கோஷ்ட்ட அழகை சொல்வதா செங்கல்லினை இழைத்து இழைத்து செய்திருக்கின்றனர். சண்டேசர் சன்னதியின் மேற்க்கூரையினை பார்த்து வியக்காமல இருக்க இயலாது அழகான ஒரு பிரமிடு போல் நாற்புறமும் சரி சமமாக சரிந்து இறங்குகின்றன. கருங்கல்லில் சிற்பங்கள் பேசும், செங்கல்லில் சுவர்கள் பேசும். சண்டேசர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தாலும் மெல்லிய ஒரு புன்முறுவல் காட்டி அமர்ந்திருக்கின்றார். கருவறை வாயிலில் கம்பீரமான பெரிய விநாயகர், தென்புற சிற்றாலயத்தில் இருந்தவராகலாம். மேற்கில் இருந்த திருமாளிகை பத்தியில் இருந்த சிற்பம் தான் இந்த விஷ்ணு, கையில் சங்கு சக்கரங்களுடன் நிற்கிறார்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/302094148_8007281306011576_4734800148868102472_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305148063_8007283106011396_7996602810146489898_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305650799_8007283902677983_1385675316439099676_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305763907_8007281339344906_5932404710103770207_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305844090_8007284242677949_1187404208096723909_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306008284_8007281449344895_8420855376638190460_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306284167_8007283966011310_3743265674290412260_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306286321_8007283336011373_1960902519452187813_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306586629_8007283299344710_1327552667142307878_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306657119_8007283246011382_3465826873466825149_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/306831844_8007281349344905_2728051516976349342_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/307207682_8007283932677980_2406406633787318566_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/307312669_8007281832678190_1292360562241954928_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/307509354_8007282919344748_9033677604560721512_n.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலகொண்டத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி