Saturday Jan 18, 2025

முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில், திண்டிவனம்

முகவரி

அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் திருக்கோயில், முன்னூர், திண்டிவனம் மாவட்டம் – 604301.

இறைவன்

இறைவன்: ஆடவல்லீஸ்வரர் இறைவி: பிரகன்நாயகி

அறிமுகம்

முன்னூரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஆடவல்லீஸ்வரர் ஆலயம். இங்கே ஆடவல்லீஸ்வரர் நடராஜப் பெருமானாக இல்லாமல், சிவலிங்க மூர்த்தமாக எழுந்தருளி இருக்கிறார் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம். சிவாலயங்களில் சிவபெருமான் பொதுவாக கிழக்கு நோக்கியே காட்சி தருவதையும், தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருவதையும் காணலாம். ஆனால், தரிசிப்பவர்களின் வினைகளைக் களைந்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண அருளும் ஐயன் ஆடவல்லீஸ்வரர் இங்கே ஞான குருவாக தெற்கு நோக்கியும், தட்சிணாமூர்த்தி மேற்கு நோக்கியும் காட்சி தருவது மிகவும் அபூர்வம். முருகப்பெருமான் அருளாடல் நிகழ்த்திய தலமும் இதுதான். முருகப்பெருமானின் அருளால், இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் நல்லியக்கோடன் எதிரிகளை வெற்றி கொண்டான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் சுமார் 19 கி.மீ தொலைவில் உள்ளது ஆலங்குப்பம். இந்த ஊரில் இருந்து கிளையாகப் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவு பயணித்தால், முன்னூர் கிராமத்தையும் ஸ்ரீஆடவல்லீஸ்வரர் ஆலயத்தையும் அடையலாம்.

புராண முக்கியத்துவம்

ஒருமுறை தேவர்களின் குருவாகவும், நவகிரகங்களில் ஒருவராகவும் திகழும் குரு பகவானுக்கு கர்வம் ஏற்பட்டது. அடுத்த கணமே குரு பகவான் தன் தேஜஸை எல்லாம் இழந்து விட்டார். தன்னுடைய தேஜஸ் இழந்தது தெரியாமல் அவர் தேவசபைக்கு சென்றபோது, இந்திரன் உள்ளிட்ட எவருமே அவரை வரவேற்று உபசரிக்கவில்லை. அப்போதுதான், தான் கொண்ட கர்வம் தன்னுடைய தேஜஸை இழக்கச் செய்துவிட்டது என்பது குரு பகவானுக்குத் தெரிந்தது. தன்னுடைய ஞானமும் தன்னிடமிருந்து விலகிவிட்டதையும் தெரிந்துகொண்டார். கொண்ட கர்வத்துக்கு மனம் வருந்தி பிரம்மதேவரிடம் சென்று வேண்டினார். குருவின் நிலை கண்டு இரங்கிய பிரம்மதேவர், ‘`பூவுலகில் அமைந்திருக்கும் முன்னூற்று மங்கலம் என்னும் தலத்தில், அம்பிகையுடன் நடனம்புரிந்து ஆனந்த மயமாகத் திகழும் ஐயன் ஆடவல்லீஸ்வரரை தரிசித்து வழிபட்டால், நீ இழந்த தேஜஸும், ஞானமும் திரும்பப் பெறுவாய்’’ என்று கூறினார். பிரம்மதேவர் கூறியபடியே தற்போது முன்னூர் என்று அழைக்கப்படும் முன்னூற்று மங்கலத்துக்கு வந்த குரு பகவான், ஆடவல்லீஸ்வரரை வழிபட்டு, இழந்த தேஜஸையும், தொலைத்த ஞானத்தையும் திரும்பப் பெற்றார் என்கிறது தலபுராணம். காஞ்சி மகா பெரியவா, திருவலம் மௌன குரு சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் என மகான்களும், அருளாளர்களும் இங்கு வந்து அருள்மிகு பிரகன்நாயகி சமேத ஆடவல்லீஸ்வரரை வழிபட்டு ஆலயத்தின் பெருமையையும், தலத்தின் அருமையையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

திருவிழாக்கள்

குருபெயர்ச்சி, ஐப்பசி அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள். இக்கோயிலில் வழக்கமான திருவிழாக்கள் மட்டுமின்றி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களும் அனுசரிக்கப்படுகிறது. இக்கோயிலில் சித்திரை மாதம் அக்னி நட்சத்திரத்தில் சிவசுப்ரமணியருக்கு வேல்பூஜை நடைபெறும்.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

முன்னூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டிவனம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top