முட்டம் பிரணவபுரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
முட்டம் பிரணவபுரீஸ்வரர் சிவன்கோயில்,
முட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608306.
இறைவன்:
பிரணவபுரீஸ்வரர்
இறைவி:
பிரணவாம்பிகை
அறிமுகம்:
கடலூர் மாவட்டத்தின் தென் எல்லை தான் இந்த முட்டம், கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளகிராமம். கொள்ளிடம் ஆறு வடக்கு நோக்கி உத்திரவாகினியாக திரும்புகிறது அதனால் ஆற்றில் துருத்திய பகுதியாக உள்ளதால் இதற்கு முட்டம் என பெயர். இங்குள்ள சிவன் கோயில் சிதிலமானதால், இவ்வூர் மக்கள் லிங்கம், சண்டேசர், இறைவி, பலிபீடம், மற்றும் சிறிய லிங்கம் வைரவர், விநாயகர் முதலானவற்றினை அவ்வூர் அய்யனார் கோயில்வெளி மண்டபத்தில் நிலைநிறுத்தம் செய்து வைத்திருந்தனர். தற்போது இந்த இறைவனுக்கு ஓர் அழகிய மேற்கு நோக்கிய புத்தம் புது கோயில் ஒன்று உருவாகியுள்ளது.
இறைவன்- பிரணவபுரீஸ்வரர் இறைவி பிரணவாம்பிகை மேற்கு நோக்கிய கருவறை கொண்ட கோயில், நான்கு புறம் மதில் சுவருடன் முகப்பில் மூன்று நிலை கோபுரம் கொண்டுள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். அழகிய ரிஷபம் ஒன்று இறைவன் எதிரில் உள்ளது. தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர் அடுத்து காசிவிஸ்வநாதர் வாராகி அம்மன் வடமேற்கு பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகன் மகாலட்சுமி உள்ளனர். கருவறையின் பின்புறம் பெரிய வேப்பமரம் உள்ளது. அதனடியில் சிறிய விநாயகரும் சில நாகர்களும் உள்ளனர். வடகிழக்கில் நவகிரகங்களும் பைரவர் சந்திரன் மற்றும் சூரியன் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
முட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காட்டுமன்னார்கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி