மார்தாண்ட சூரியன் கோயில், ஜம்மு-காஷ்மீர்
முகவரி
மார்தாண்ட சூரியன் கோயில், சூரியன் கோயில் தெரு, மார்தாண்ட, அனந்தநாக் ஜம்மு-காஷ்மீர் – 192 125.
இறைவன்
இறைவன் : மார்தாண்டன் (சூரியன்)
அறிமுகம்
மார்தாண்ட சூரியன் கோயில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் சூரிய பகவான் ஆவார். மார்த்தாண்ட சூரியன் கோயில் காந்தாரம், சீனம், கிரேக்க கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.220 அடி நீளமும், 142 அகலமும் கொண்ட சூரிய கோயில் வளாகத்தில் 84 சிறிய சன்னதிகள் கொண்டிருந்தது. இக்கோயிலில் வேத கால தெய்வங்களான சூரியன், விஷ்ணு, கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் உள்ளது.ஜம்மு காஷ்மீரில் உள்ள இக்கோயிலை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது.[13] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக இச்சூரியன் கோயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
மார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோடப் பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் கி.பி எட்டாம் நூற்றாண்டில் கட்டினார். கிபி 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. மார்தாண்ட சூரியன் கோயிலின் அஸ்திவாரம் கி பி 370 – 500 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. கோயில் அமைப்பு கார்கோடகப் பேரரசன் இரணாதித்தியன் காலம் முதல் துவக்கப்பட்டது.கி பி 15ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சிக்கந்தர் பட்சிகான் எனும் இசுலாமிய ஆட்சியாளாரால் மார்த்தாண்ட சூரியன் கோயில் முழுவதுமாக சிதைக்கப்பட்டது.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சூரியக்கோவில்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஸ்ரீநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
ஸ்ரீநகர்