மருதம்பட்டினம் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
மருதம்பட்டினம் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில்,
மருதம்பட்டினம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610001
இறைவன்:
தான்தோன்றீஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
திருவாரூரின் தேர்வீதியின் தென்கிழக்கு மூலையில் இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். அழகான இயற்கை எழில் நிரம்பிய கிராமம் மருதம்பட்டினம். இவ்வூரில் இரு சிவன்கோயில்கள் உள்ளன. முதலாவது தான்தோன்றிஈஸ்வரர் இரண்டாவது அபிமுக்தீஸ்வரர், ஊருக்குள் நுழையும் முன்னரே தொடர்வண்டிபாதை செல்கிறது, அதனை ஒட்டி வலதுபுறம் சிறிய தெரு செல்கிறது அது ஒரு முன்னாள் ராணுவத்தினர் நகர் அதில் தான் இந்த தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது.
இக்கோயில் மேற்கு நோக்கிய திருக்கோயில், இறைவன் மேற்கும் அம்பிகை தெற்கும் நோக்கி உள்ளனர். இறைவன் – தான்தோன்றீஸ்வரர் இறைவி – சௌந்தரநாயகி புதிதாக அமைக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம். நடுத்தர அளவிலான லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் பால முருகன் உள்ளனர். இறைவன் எதிரில் ஒரு நந்தியும் பலிபீடமும் உள்ளது. இறைவன் கருவறை சுற்றி மாடங்களில் துர்க்கை, பிரம்மன் லிங்கோத்பவர் மற்றும் தக்ஷ்ணமூர்த்தி உள்ளனர். கருவறையின் பின்புறம் பைரவர் சூரியன் சந்திரன் மூவரும் தனி தனி மாடங்களில் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருதம்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி