மன்னார்குடி சோழேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி
மன்னார்குடி சோழேஸ்வரர் சிவன் கோயில், பட்டகாரதெரு, மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் – 614001.
இறைவன்
இறைவன்: சோழேஸ்வரர் இறைவி: வாலாம்பிகை
அறிமுகம்
மன்னார்குடியில் இருந்து பாமணி கோயில் செல்லும் ஆற்று பாலத்தினை கடந்து வலதுபுற சாலையில் சென்றால் பட்டகாரதெரு அடையலாம். இங்கு கிழக்கு நோக்கிய பழமையான சிவன்கோயில் ஒன்றுள்ளது, கிழக்கு நோக்கினும் பிரதான வாயில் தென்புறமே உள்ளது. இறைவன் சோழேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி வாலாம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். கோவில் சரியான பராமரிப்பின்றி உள்ளது. சுவர்களில் விரிசல்கள் காணப்படுகிறது. கோவிலுக்குள் உள்ள பாதை முட்செடிகள் முளைத்துள்ளன. அதேபோல் கோவிலை சுற்றிலும் மரம் செடிகள் உள்ளன.
புராண முக்கியத்துவம்
இறைவன் கருவறை வாயிலில் சுதையாலான துவாரபாலகர்களும் ஓர் சிறிய விநாயகர் சிலை ஒன்றும் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் துர்க்கை மட்டும் உள்ளார். பிரகார கோயில்களாக விநாயகரும், முருகனும் உள்ளனர். இக்கோயிலின் சித்திரகுப்தர் மானிடர்கள் பிறந்து இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களினையும் எழுதிவைக்கின்றார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளினை ஆகாஷிக் குறிப்புகள் என அழைப்பர். இவை தவிர பைரவர், சனி, சூரிய சந்திரர்கள் மேற்கு நோக்கிய மாடங்களில் உள்ளனர். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நம்பிக்கைகள்
நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோஷம் நீங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது ஜோதிடங்கள் கூறும் தகவலாகும்.
சிறப்பு அம்சங்கள்
வடகிழக்கில் சித்திரகுப்தர் தனி சன்னதியில் மேற்கு நோக்கி நின்றபடி அருள்பாலிப்பது மற்றொரு சிறப்பாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி