Wednesday Oct 02, 2024

பெருந்தலைக்குடி அக்னிபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :

பெருந்தலைக்குடி அக்னிபுரீஸ்வரர் சிவன்கோயில்,

பெருந்தலைக்குடி, கீழ்வேளுர் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம் – 611109

இறைவன்:

அக்னிபுரீஸ்வரர்

இறைவி:

அபயாம்பிகை

அறிமுகம்:

 கீழ்வேளூர் –தேவூர் வந்து, ஊருக்குள் செல்லாமல் இரண்டு கிமீ தூரம் கடுவையாற்றின் தென்கரையில் சென்றால் இந்த பெருந்தலைக்குடி அடையலாம். சிறிய ஆற்றோர கிராமம், இங்கும் இறைவன் எழுந்தருளி உள்ளார். சிறிய கோயில் என்றாலும் அனைத்து அம்சங்களுடன் உள்ள கோயில். இறைவன்- அக்னிபுரீஸ்வரர் இறைவி- அபயாம்பிகை


இந்த தலம் மகாபாரத கதையுடன் இணைந்த பெருமை கொண்டது. இக்கோயில் இறைவன் அர்ஜுனனால் வழிபடப்பட்டவர், அதனால் அர்ஜுனேஸ்வரர் (தற்போது அக்னிபுரீஸ்வரர்) எனப்படுகிறார். இதன் அருகாமையில் உள்ள இருக்கை, பீமனால் வழிபடப்பட்ட பீமேஸ்வரர் ஆவார். தேவூரில் உள்ள இறைவன் தேவபுரீஸ்வரர் நகுலன் சகாதேவனால் வழிபடப்பட்டது ஆகும்.


கிழக்கு நோக்கிய கோயில் இறைவன் சற்று நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார். அம்பிகையும் அழகிய உருவம் கொண்டு தெற்கு நோக்கியுள்ளார். இரு கருவறைகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது இந்த மண்டபத்திலேயே விநாயகர் முருகன் பைரவர் உள்ளனர். இந்த மண்டபத்தின் வெளியில் இறைவனின் நேர் எதிரில் நந்தி மண்டபம் பலிபீடம் கொடிமர விநாயகர் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன், லிங்கோத்பவர் துர்க்கை உள்ளனர். நவகிரகம் வடகிழக்கில் உள்ளது. கோயிலின் தென்புறம் பெரிய ஆழமான குளம் உள்ளது அது தான் இக்கோயிலின் தீர்த்தகுளம் எனப்படுகிறது. தலமரம் விளாமரம் என குறிப்பிடப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெருந்தலைக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top