பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில், திருச்சி
முகவரி
பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில், பெருங்குடி, திருச்சி மாவட்டம் – 622506.
இறைவன்
பெருங்குடி அகஸ்தீஸ்வரர் கோயில், பெருங்குடி, திருச்சி மாவட்டம் – 622506.
அறிமுகம்
சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி – வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் அடுத்து திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் பெருங்குடி அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து உய்யக்கொண்டான் வழியாக பெருங்குடி செல்லலாம். பெருங்குடியில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலில் இரண்டாம் பராந்தகனான சுந்தரசோழனின் எட்டாம் ஆட்சியாண்டு கல்வெட்டு காணப்படுவதால் சுந்தரசோழன் கி.பி.968 காலத்தில் இக்கோயில் எழுப்பப் பெற்றதாக இருக்கலாம். சுந்தரசோழனின் மகன் ஆதித்த கரிகாலனின் 3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. வீரபாண்டிய தலைக்கொண்ட கோப்பரகேசரி என்று ஆதித்த கரிகாலன் குறிப்பிடப்படுகிறான். பிற்காலச் சோழர்காலக் கல்வெட்டுகளில் பெருமுடி அகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலும் சிற்பங்களும் சுந்தரசோழன் கால கட்டட-சிற்பக் கலைக்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. கருவறைக் கோட்டங்களில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, சண்டிகேசுவரர், விஷ்ணு, முருகன் கணபதி ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.
காலம்
8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெருங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி