Wednesday Dec 18, 2024

பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், சேலம்

முகவரி

அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில், பெத்தநாயக்கன்பாளையம், சேலம் மாவட்டம் – 639 109. போன்: +91- 4282 – 221 594

இறைவன்

இறைவன்: ஆட்கொண்டீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் சேலம், பெத்தநாயக்கன்பாளையம் என்னுமிடத்தில் உள்ளது. லிங்கத்தின் கீழ்ப்பகுதி தாமரை போன்ற வடிவமைப்பு உள்ளது. சக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக சிவன், தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சிதந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தியிலிருந்து தோன்றுவதுதான் சிவம் என வலியுறுத்தும் விதமாக சக்தியின் ஆயுதமான சூலத்தின் மத்தியில் அமைந்தும் காட்சி தருகிறார். இந்த வித்தியாசமான அர்த்தநாரீஸ்வரர் சேலம் அருகிலுள்ள பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோயிலில் உற்சவராக அருள்புரிகிறார்.

புராண முக்கியத்துவம்

சிவத்தலயாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வணங்கினார். அதில் ஒன்றே இந்தக் கோயிலிலுள்ள லிங்கமாகும். இந்த லிங்கம் காலவெள்ளத்தில் புதைந்து விட்டது. பிற்காலத்தில் இப்பகுதியில் வசித்த சிவனடியாரின் கனவில் தோன்றிய சிவன், தான் வசிஷ்டநதியின் தென்கரையில் மண்ணில் புதையுண்டு இருப்பதாக கூறினார். அவர் லிங்கத்தை தோண்டி எடுத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்தார்.

நம்பிக்கைகள்

அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி இரண்டும் ஒரே மண்டபத்தில் அருகருகில் அமர்ந்துள்ளது. பிரதோஷ காலத்தில் இவர்களை வணங்கினால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

சிறப்பு அம்சங்கள்

சுவாமி அமைப்பு: கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார் தாமரை மலர் போன்ற அமைப்பில் இருக்கிறது. சுவாமி தன் நெற்றியில் நெற்றிக்கண்ணுடன் காட்சி தருவது சிறப்பு. தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை “ஆட்கொண்டீஸ்வரர்’ என்கின்றனர். அம்பாள் “அகிலாண்டேஸ்வரி’ என்ற திருநாமத்துடன் அருளுகிறாள். நின்றநிலையில் உற்சவர்: பொதுவாக உற்சவர் சிலைகள் அமர்ந்தநிலையில் வடிவமைக்கப்படும். இவையே விழாக்காலங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படும். ஆனால், இங்குள்ள உற்சவர் சந்திரசேகர் மற்றும் அம்பாள் இருவரும் நின்ற வடிவில் பக்தர்களுக்கு அருளுகின்றனர். தங்களை வரவேற்று, வணங்கும் பக்தர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், இவர்கள் எழுந்து நின்று அருளுகின்றனர் என்ற பரவசமூட்டும் தகவலும் இத்தலத்தின் விசேஷம். சூல அர்த்தநாரீஸ்வரர் இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர், சூலத்தின் மத்தியில் அமைந்து காட்சி தருகிறார். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி எனும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார். தாயை விட்டு பிரிந்துள்ள பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்க

திருவிழாக்கள்

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெத்தநாயக்கன்பாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பெத்தநாயக்கன்பாளையம்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர், திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top