பூவம் சித்திநாதர் சிவன்கோயில், காரைக்கால்
முகவரி :
பூவம் சித்திநாதர் சிவன்கோயில்,
பூவம், கோட்டுச்சேரி கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609609.
இறைவன்:
சித்திநாதர்
இறைவி:
பூவனநாயகி
அறிமுகம்:
காரைக்கால் – பொறையார் சாலையில் 8-கிமீ தூரத்தில் உள்ளது இந்த பூவம். பொறையாரில் இருந்து தெற்கில் 5-கிமீ-ல் உள்ளது. பிரதான சாலையின் கிழக்கில் உள்ளது சிவன்கோயில். பூவனம் என்பதே பூவம் என மருவியுள்ளது. அம்பிகையின் பெயர் பூவனநாயகி என பெயர் இருப்பதன் மூலம் இதனை அறியலாம். சிறிய அமைதியான கடற்கரை கிராமம். Karaikal / NIT செல்லும் சாலை இவ்வூர் வழியே செல்கிறது. கிழக்கு நோக்கிய கோயில். ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. சமீபத்தில் செய்த குடமுழுக்கின் கல்வெட்டு கோபுரவாயிலில் உள்ளது அதில் 2015-வில் குடமுழுக்கு கண்ட செய்தி சொல்லப்பட்டுள்ளது.
இறைவன் சித்திநாதர் கிழக்கு நோக்கிய கருவறையும், இறைவி பூவனநாயகி தெற்கு நோக்கிய கருவறையும் கொண்டுள்ளார். இரு கருவறைகளையும் ஒரு மண்டபம் இணைக்கிறது. மண்டபத்தின் வெளியில் இறைவனை நோக்கி அழகிய நந்தியெம்பெருமான் மண்டபத்தில் வீற்றிருக்கிறார். கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன் ஆகியோரும், லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை ஆகியோரும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர் முருகன் இருவருக்கும் தனி சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசர் தனி கோயில் கொண்டுள்ளார். வடகிழக்கில் நவகிரகங்கள் அழகிய எண்கோண மண்டபத்தில் உள்ளனர். மேற்கு நோக்கிய மண்டபத்தில் ஏகாம்பரநாதர், காமாட்சிஅம்மன், மற்றும் ஆறு நாகங்கள், மகாவிஷ்ணு, சூரியன், சனி, பைரவர் ஆகியோரும் உள்ளனர். ஏகாம்பரநாதர், காமாட்சிஅம்மன் மகாவிஷ்ணு, இவை மேற்கில் இருந்த திருமாளிகைபத்தியில் இருந்தவையாக இருக்கலாம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூவம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி