பூர்த்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்
முகவரி :
பூர்த்தங்குடி அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
பூர்த்தங்குடி, காட்டுமன்னார்கோயில் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608305.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
காட்டுமன்னார்கோயிலில் இருந்து வீராணம் ஏரிக்கரை வழியாக சிதம்பரம் செல்லும் சாலையில் பத்தாவது கிமீ-ல் உள்ளது பூர்த்தங்குடி. சோழ மன்னர்கள் பூர்த்த தர்மமாக வீரநாராயணன் ஏரியை வெட்டி பூர்த்ததர்மகுடி என ஒரு ஊரையும் ஒரு சிவாலயத்தையும் அமைத்தனர். ஆனால் சோழர்களது முழுமையான கோயில் இன்றில்லை. அதன் மிச்சங்களாக கருங்கல் கருவறையும் கொண்ட கோயில் உள்ளது எனினும் பழமை வாய்ந்த சோழர்கால கோயில் இது என்பதில் ஐயமில்லை. அதிட்டானம் முதல் பிரஸ்தரம் எனும் மேல்மட்டம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது, பழம் கருவறை கோட்டங்கள் செங்கல் கொண்டு மட்டமாக பூசப்பட்டுள்ளது, கும்ப பஞ்சரங்கள் ஒரு புறம் சிறிது வெளியில் தெரியும் வண்ணம் உள்ளது.
கிழக்கு நோக்கிய இறைவன் அகத்தீஸ்வரர் என பெயர் கொண்டுள்ளார். சற்று அழகான நடுத்தர லிங்கமூர்த்தி, இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். கருவறை வாயிலில் விநாயகர் முருகன் மாடங்களில் உள்ளனர். இறைவன் எதிரில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. அதன் ஒரு புறம் மேற்கு நோக்கிய அலமேலு சமேத பெருமாள் கருவறை உள்ளது. எதிரில் சிறிதாய் கருடன் ஆகியோர் உள்ளனர். தென்முகன், துர்க்கை காலபைரவர் நவகிரகம் என சிறிய சன்னதிகளும் உள்ளன. ஒரு வில்வமரத்தடியில் இரண்டு பழமையான நந்திகள் உள்ளன. கோயிலின் வெளியில் ஒரு லிங்க மூர்த்தியின் ஆவுடையார் மட்டும் தனித்து கிடக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூர்த்தங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி