பூந்தாழங்குடி ஜலகண்டேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பூந்தாழங்குடி ஜலகண்டேஸ்வரர் சிவன்கோயில்,
பூந்தாழங்குடி, கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610103.
இறைவன்:
ஜலகண்டேஸ்வரர்
இறைவி:
உத்பிஜவாசினி
அறிமுகம்:
பூந்தாழங்குடி திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் மன்னார்குடி சாலையில் 9 கிமீ தூரம் வந்தவுடன் பாண்டவை ஆறு, அதன் தென்கரை வழி கிழக்கில் செல்லும் சாலையில் 3 கிமீ வந்தால் பூந்தாழங்குடி உள்ளது. ஆற்றோரத்தை ஒட்டிய ஊர், இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. கோயில் சிறியது தான், இருப்பினும் சிறப்புவாய்ந்த ஒரு கோயில். இறைவன் – ஜலகண்டேஸ்வரர் இறைவி – உத்பிஜவாசினி.
இறைவன் கிழக்கு நோக்கியவர், கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். அழகிய லிங்க மூர்த்தியாக உள்ளார் இறைவன், எதிரில் அழகிய நந்தியும் பலிபீடமும் உள்ளது. கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் உள்ளார்கள். இறைவன் முன்னர் நீண்ட முகப்பு மண்டபம் உள்ளது அதில் தெற்கு நோக்கி ஆஞ்சநேயர் சன்னதி கொண்டு உள்ளார் இவர் சமீபத்திய இடைச்செருகலாக இருக்கலாம். கருவறை கோட்டங்களில் தென்முகன் ரிஷபாரூடர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் தனி சந்தியில் உள்ளார். வடகிழக்கில் நவகிரகம் மற்றும் இரு பைரவர்கள் உள்ளனர். கோயிலின் தென்புறம் ஒரு குளமும் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூந்தாழங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி