பூதமங்கலம் பூதநாதர் சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/305088484_7948164271923280_4631639707965216546_n.jpg)
முகவரி :
பூதமங்கலம் பூதநாதர் சிவன்கோயில்,
பூதமங்கலம், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610102.
இறைவன்:
பூதநாதர்
இறைவி:
பூதநாயகி
அறிமுகம்:
மன்னார்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையில் சாலையில் பதினொரு கிமீ சென்றால் கூத்தாநல்லூர் அதனையடுத்து ஒரு கிமீ சென்றால் பூதமங்கலம் சாலை வடக்கு நோக்கி பிரிகிறது. அதில் இரண்டு கிமீ சென்றால் பூதமங்கலம் உள்ளது. பௌத்த சமய நூல்களை எழுதிய புத்ததத்தர் என்ற பௌத்த துறவி மன்னார்குடி பக்கத்தில் உள்ள பூதமங்கலத்தில் வாழ்ந்துவந்துள்ளார். வேணுதாசர் என்பவர் கட்டிய புத்தவிகாரம் இங்கு இருந்துள்ளது.. புத்தமங்கலமே பூதமங்கலம் ஆகி உள்ளது. தற்போது புத்த விகாரை ஏதும் காணப்படவில்லை. ஊர் முற்றிலும் பிற மதத்தினரிடம் சென்றுவிட்டது. ஊரை தாண்டி வட திசையில் செல்லும் சாலையில் ஒரு திருப்பத்தில் கோயில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கிய சிவன்கோயில், இறைவன் பூதநாதர் இறைவி பூதநாயகி. பூதநாதர் எனும் பெயர் கொண்ட இறை மூர்த்திகளை அதிகம் காண இயலாது, தற்போது இருக்குமிடமும் மாற்று மதத்தினர் ஆதிக்கம் உள்ள இடத்திற்கருகிலேயே உள்ளது.
புராண முக்கியத்துவம் :
‘பூத’என்ற சொல்லுக்கு மகிழ்ச்சி என்று பொருள். ‘பூதி’ என்பதற்கு செல்வம் என்று பொருள். பூதர்கள் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்தவர்களாகவும், ஆடல், பாடல்களில் விருப்பமுள்ளவர்களாகவும், இசைக்கருவிகளை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு, பூதர்கள் அவரை விட்டுப் பிரியாது இருக்கின்றனர். சிவபெருமான், ‘பூதபதி’ என்றும் ‘பூத நாயகன்’என்றும் அழைக்கப்படுகிறார்.
இறைவன் மேற்கும் இறைவி தெற்கும் நோக்கி அமர்ந்துள்ளனர். இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக பெரிய அளவில் உள்ளார். அம்பிகையும் அவருக்கு இணையாக உள்ளார். கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன் விஷ்ணு, பிரம்மன் துர்க்கை உள்ளனர். விநாயகருக்கு தனி சிற்றாலயம் உள்ளது. ஒரு மரத்தடியில் ஒரு பெண்தெய்வம் உள்ளது. அருகில் உடைந்த நந்தி உள்ளது. சண்டேசர் நவகிரகம் பைரவர் என அனைத்தும் உள்ளது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/303315683_7948166785256362_4359202257150416734_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/304850346_7948164748589899_5313019557864286202_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305030388_7948166778589696_9060246030916400211_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305058739_7948167308589643_4445224420436777171_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305088484_7948164271923280_4631639707965216546_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/305268138_7948166755256365_3220472801099212014_n.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூதமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி