புள்ளமங்கலம் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
புள்ளமங்கலம் காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
புள்ளமங்கலம், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
விசாலக்ஷி
அறிமுகம்:
திருவாரூரில் இருந்து திருத்துறைபூண்டி சாலையில் பத்து கிமீ தூரம் வந்தவுடன் மாவூர் பாலத்தை தாண்டி வலதுபுறம் நாட்டியத்தான்குடி ஊட்டியாணி வழியாக 7 கிமீ பயணம் செய்தால் புள்ளமங்கலம் அடையலாம். புள்ளமங்கலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் தோராயமான வயது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர். ஊர் பெரியவர்களின் கூற்றுப்படி, இந்த கோவிலுக்கு கடைசியாக 1940 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல காலம் பூசையின்றி சிதைவுண்டு கிடந்தது. ஊர்மக்கள் ஒன்றிணைந்து பெரும் முயற்சி செய்து பணிகளை முடித்து குடமுழுக்கு செய்துள்ளனர்.
இக்கோயில் மங்கள ரிஷி உருவாக்கப்பட்டது என ஒரு வரலாறு உள்ளது. புள் என்பது கழுகான ஜடாயுவை குறிக்கிறது. இந்த இடமும் கருடன்/ஜடாயுவுடன் தொடர்புடையது, எனவே இந்த கிராமத்தின் பெயர் புள்ளமங்கலம் என்பது ஏற்புடையதே. இறைவன்-காசி விஸ்வநாதர், இறைவி-விசாலக்ஷி கிழக்கு நோக்கிய திருக்கோயில் இறைவன் கிழக்கும் இறைவி தெற்கும் நோக்கி உள்ளனர். பிரதான வாயில் தென்புறம் உள்ளது. கருவறை கோஷ்டங்கள் தெற்கில் தென்முகன் மற்றும் வடக்கில் ராஜதுர்க்கை மட்டும் மாடம் போன்ற அமைப்பில் உள்ளனர்.
பிரகார சிற்றாலயங்களாக விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், ருணவிமோசனர் ருத்ரஅம்ச ஆஞ்சநேயர் சண்டேசர், உள்ளனர். வடகிழக்கில் பழமையான பைரவர் மற்றும் சனி மற்றும் ஒரு நாகரும் உள்ளனர். இதில் ருணவிமோசனர் பிறவி கடன்களை தீர்க்கவல்லவர், உடல்பிணிகளை தீர்க்கவல்லவர். தற்போது கோயிலில் அனைத்து விசேஷங்களும் நடைபெற்றுவருகின்றன.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புள்ளமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி