புளியஞ்சேரி கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
புளியஞ்சேரி கைலாசநாதர் சிவன்கோயில்,
புளியஞ்சேரி, குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612604.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
காமாட்சி
அறிமுகம்:
கும்பகோணம் – திருவாரூர் நெடுஞ்சாலையில் நாச்சியார்கோயில் அடுத்து உள்ள மாத்தூர்-அச்சுதமங்கலம் சாலையில் 9கிமீ-ல் உள்ள பிலவாடி வந்து பருத்தியூர் சாலையில் 1 கிமீ சென்று இடதுபுறம் திரும்பினால் புளியஞ்சேரி உள்ளது. அச்சுதமங்கலத்தில் இருந்தும் 10கிமீ தான். பல புளியஞ்சேரிகள் உள்ளதால் இவ்வூர் 27.புளியஞ்சேரி எனப்படுகிறது.
புளியஞ்சேரி என்பது முடிகொண்டான் ஆற்றி்ன்கரையோர கிராமம். மிக சிறிய கிராமம், 100வீடுகள் தான் இருக்கும். பெரிய குளம் ஒன்று அதனை சுற்றிய நான்கு தெருக்களும் உள்ளன. இந்த சின்ன கிராமத்தில் கைலாசநாதர் திருக்கோவிலும், விஸ்வநாதர் திருக்கோவிலும் அருகருகே அமைந்துள்ளது. இது வேறு எந்த கிராமத்திலும் காண முடியாத சிறப்பாகும்.
புராண முக்கியத்துவம் :
கைலாசநாதர் திருக்கோவில் சுமார் 100ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தினரால் திருப்பணி செயப்பட்டது. இங்கு விநாயகர், முருகன், கைலாசநாதர் சன்னதிகள் இருந்தன. தற்போது எந்த விதமான பராமரிப்பும் இல்லாமல் மரங்கள் முளைத்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. முற்றிலும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதன் காரணமாக, கிராம மக்கள் ஒன்றுகூடி, தகர கொட்டகை அமைத்து அதில் அனைத்து தெய்வங்களையும் வைத்து பூஜை செய்து வந்தனர். தற்போது கைலாசநாதர் திருக்கோவிலை புதிதாக கட்டி பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கும் நடைபெற்றுள்ளது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில். முகப்பு வளைவு பார்க்க பிரம்மாண்டமாக இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் எதிரில் தனி மண்டபத்தில் நந்தி மண்டபம் உள்ளது. அழகான கம்பீரமான நந்தி பார்வைக்கு அழகாக உள்ளது. திருக்கோயில் புதிதாக எழுப்பப்பட்டாலும் பழமையான கட்டுமானம் போலவே அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் தென்முகன் உள்ளார். வடக்கில் துர்க்கை உள்ளார். பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். விநாயகர் விமானம் கஜபிருஷ்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. முருகன் வள்ளி தெய்வானை சமேதராக உள்ளார். சண்டேசர் சிற்றாலயமும் அழகுற வடிவமைக்கப்பட்டு உள்ளது. அருகாமை திருக்கோயிலில் வீற்றிருக்கும் விஸ்வநாதர் இன்னும் அதே நிலையில் தான் உள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புளியஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி