Thursday Dec 19, 2024

புலிப்பாக்கம் ஸ்ரீ வியாக்கிரபுரீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

புலிப்பாக்கம் ஸ்ரீ வியாக்கிரபுரீஸ்வரர் சிவன்கோயில், புலிப்பாக்கம், செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 101.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ வியாக்கிரபுரீஸ்வரர் இறைவி: ஸ்ரீ மாங்கல்யம் காத்த நாராயணி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த புலிப்பாக்கம் கிராமம். செங்கல்பட்டுக்கு மிக அருகாமையில் பரனுர் ரயில் நிலையம் எதிரில் உள்ள மலை மீது அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த ஒரு சிவாலயம். இங்குள்ள ஈசனை ஸ்ரீ வியாக்கிரபாத முனிவர் வழிபட்டுள்ளதால் இறைவனுக்கு ஸ்ரீ வியாக்கிரபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டு விளங்குகிறார். அம்பாள் ஸ்ரீ மாங்கல்யம் காத்த நாராயணி அம்பாள். இங்கு அமைந்துள்ள சன்னதிகள், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகம், பைரவர், குபேர லிங்கம், வியாக்கிரபாதர், பதஞ்சலிமுனிவர், மற்றும் காளி தேவி மற்றும் ஸ்ரீ ராகவ ஸ்வாமிகள் மடம். கோவில் கவனிப்பாரின்றி உள்ளது. ஒரு வேளை பூஜை நடைபெறுகிறது. தொடர்புக்கு திரு பார்த்திபன்-9710058296. செங்கல்பட்டு- புலிப்பாக்கம் பேருந்து உண்டு.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புலிப்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பரனுர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top