Wednesday Dec 25, 2024

புதுப்பிடாகை மார்க்கசகாயர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி :

வேலூர் (புதுப்பிடாகை) மார்க்கசகாயர் சிவன்கோயில்,

புதுப்பிடாகை, மயிலாடுதுறை வட்டம்,

மயிலாடுதுறை மாவட்டம் – 609807.

இறைவன்:

மார்க்கசகாயர்

இறைவி:

வாலாம்பாள்

அறிமுகம்:

இந்த புதுப்பிடாகைக்கு வேலூர் எனும் பெயரும் உள்ளது. இந்த புதுப்பிடாகை குத்தாலம்- பந்தநல்லூர் சாலையில் உள்ள பழவாற்றினை தாண்டியதும் வலது புறம் ஒரு சிறிய சாலை நல்லத்தடி எனும் ஊரை இணைக்கிறது, அதில் சிறிது தூரம் சென்றால் நல்லத்தடி தொடக்கப்பள்ளி அதன் எதிரில் உள்ள சிறு சாலையில் அரை கிமீ தூரம் சென்றால் புதுப்பிடாகை. குக்கிராமம் இரண்டே தெரு தான் இதில் கிழக்கு நோக்கிய கோயில் கொண்டிருந்தார் எம்பெருமான். ஆம் முன்னர் கோயில் கொண்டிருந்தார். இப்போது கோயில் முற்றிலும் சிதிலமடைந்துவிட, மூர்த்திகள் அனைத்தும் ஒரு சிறு கட்டிடத்தில் வைத்து சில வருடங்களாக பூஜீக்கப்படுகின்றன. இறைவன் மார்க்கசகாயர், இறைவி வாலாம்பாள், விநாயகர், முருகன் சண்டேசர் பைரவர், சூரிய சந்திரர்கள் என அனைத்தும் கொண்ட சிவாலயம். புதிய கோயில் எழுப்ப, பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா மற்றும் இ.ச.அற. துறையின் குறுக்கீடால் பணிகள் தரைமட்டத்தில் நிற்கின்றது. போதுமான அளவு செங்கற்கள், கற்றும் கட்டிட பொருட்கள் இருந்தும், பணிகள் நின்றுபோயுள்ளன. மார்க்கசகாயரே மார்க்கம் காட்டவேண்டும்!!.

  #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

புதுப்பிடாகை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top