பீமா கிச்சக் கோவில், சத்தீஸ்கர்
முகவரி
பீமா கிச்சக் கோவில், மல்ஹார், சத்தீஸ்கர் – 495551
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பீமா கிச்சக் கோயில், இந்திய மாநிலமான சத்தீஸ்கரில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மல்ஹார் நகரில் அமைந்துள்ளது. இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் இந்த ஆலயத்தை “தேயூர் கோவில்” என்று குறிப்பிடுகின்றனர், அதே நேரத்தில் இந்த கோவில் பீமா கிச்சக் என்று அழைக்கப்படுகிறது. பாதாளேஷ்வர் மகாதேவர் கோயிலைப் போன்றது. இந்த கோவில் பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958 ன் கீழ் மற்றும் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
மல்ஹார், ஒரு பழங்கால நகரம் இரண்டு கோவில்களின் இடிபாடுகள் மற்றும் ஒரு மண் கோட்டையைக் கொண்டுள்ளது. இந்த கோவில் கட்டிடக்கலை பாணியை அடிப்படையாகக் கொண்டு கிபி 6 ம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இந்த கோவில் மேற்கு நோக்கி உள்ளது. கோவில் சிதிலமடைந்துள்ளது. இந்த ஆலயம் கருவறை மற்றும் அந்தராளத்தைக் கொண்டுள்ளது. கருவறையில் சிவலிங்கம் உள்ளது. கருவறை கதவில் துவாரபாலர்களுடன் கங்கா மற்றும் யமுனாவின் படங்கள் உள்ளன. சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள் மற்றும் பல்வேறு தோரணைகளில் அழகிய சித்திரங்கள் உள்ளன. உடைந்த சிலைகள், கதவுகள், சிற்பங்கள் வளாகத்தில் காணப்படுகின்றன
காலம்
6-7 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மல்ஹார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பிலாஸ்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பிலாஸ்பூர்