பாப்பாக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், அரியலூர்
முகவரி :
பாப்பாக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
பாப்பாக்குடி, உடையார்பாளையம் வட்டம்,
அரியலூர் மாவட்டம் – 612903.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
சென்னை கும்பகோணம் தேசியநெடுஞ்சாலை NH36-ல் கங்கைகொண்டசோழபுரம் குறுக்கு ரோட்டின் வடக்கில் ஒன்பது கிமீ தூரத்தில் உள்ளது பாப்பாக்குடி. காட்டுமன்னார்கோயிலின் மேற்கில் எட்டு கிமீ தொலைவிலும் உள்ளது. கிராமம் பிரதான சாலையின் மேற்கில் அரைகிமீ தூரத்தில் உள்ளது. பாப்பாக்குடி என பல மாவட்டங்களில் ஊர்களை காணலாம். பல காலமாக சிறிய கோயிலாக இருந்த கோயில் பெரிதாக எடுத்து கட்டப்பட்டுள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயிலாக உள்ளது காசி விஸ்வநாதர் உடனுறையும் விசாலாட்சி கோயில். ஊரின் நுழைவாயிலிலேயே உள்ளது கோயில்.
இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க வடிவில் உள்ளார், தெற்கு நோக்கிய அம்பிகையும் நடுத்தர அளவில் உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். முகப்பு மண்டபம் பஞ்ச மூர்த்திகளின் சுதையுடன் அழகுற காட்சியளிக்கிறது. மண்டபத்தின் வெளியில் சிறிய மண்டபத்தில் பெரிய நந்தி ஒன்றுள்ளது. பிரகாரத்தில் விநாயகர் முருகன் இருவருக்கு மட்டும் சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் ஒரு ஆவுடையாரில்லா லிங்கமொன்றும், அருகில் சற்று பின்னம் ஆன காசி விசாலாட்சியும் தனி மாடத்தில் உள்ளனர். இவர்களே இக்கோயிலின் பழம் மூர்த்திகளாக இருத்தல் வேண்டும். அருகில் பைரவர் சனி ஆகியோரும் நவகிரகங்கள் தனி சன்னதியாகவும் உள்ளன. தென் கிழக்கில் சூரியன் ஆஞ்சநேயர் நால்வர் ஆகியோரும் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாப்பாக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி