Thursday Dec 26, 2024

பரவலூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், கடலூர்

முகவரி

பரவலூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம்

இறைவன்

இறைவன்: சுந்தரேஸ்வரர்

அறிமுகம்

விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் ஐந்து கிமி சென்றால் பரவலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது இதன் வடக்கில் ஒரு கிமி உள்ளே சென்றால் பரவலூர் கிராமம் உள்ளது இங்கு பெரிய ஆலமர நிழலில் கிழக்குநோக்கியபடி உள்ளார் எனினும் வாயில் மேற்கில் மட்டும் உள்ளது பின்புற வழியாக உள்ளே நுழைகிறோம், கோயில் மிகவும் சிதிலமாகி வருவதை கண்டு வருந்துவதை மனம் தவிர்க்க மாட்டேன் என்கிறது. இறைவன் சுந்தரேஸ்வரர் அம்பிகை பெயர் அறிய முடியவில்லை நடுத்தரமான அளவுடன் கூடிய லிங்க மூர்த்தியாக இறைவன் உள்ளார். இறைவனின் இடது புறம் ஒரு சிற்பம் உள்ளது என்ன வென்று அறிய முடியவில்லை எதிரில் சிறிய அழகான நந்தி உள்ளது. அம்பிகையும் கிழக்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார். பிரகாரத்தில் விநாயகர் அருகில் உள்ள சன்னதியில் முருகனுக்கு பதில் இங்கு நாகம் ஒன்றும் வேறு ஒரு சிறிய சிலை ஒன்றும் உள்ளது வேறு சன்னதிகள் இல்லை. கோயில் பராமரிப்பும் பூசையும் இன்றி உள்ளதை உணரமுடிகிறது. நகர பெருங்கோயில்கள் கல்லூரிகள் என்றால் கிராமக்கோயில்கள் ஆரம்பப்பள்ளிகள், அதிக மூர்த்திகள் இருக்காது எந்த மூர்த்தியை முதலில் வழிபடவேண்டும், எப்படி வழிபடவேண்டும் என இங்கே சிரமமின்றி அறியலாம். உங்கள் வருகையால் கிராம பொருளாதாரமும் சற்று மேம்பாடு காணும். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பரவலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விருத்தாசலம்

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top