பரமத்திவேலூர் பீமேஸ்வரர் திருக்கோயில், சேலம்
முகவரி
அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர், மாவுரெட்டி, சேலம் மாவட்டம்.
இறைவன்
இறைவன்: பீமேஸ்வரர் இறைவி: வேதநாயகி
அறிமுகம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பீமேஸ்வரர் கோவில் உள்ளது. பஞ்ச பாண்டவ பீமன் வழிபட்ட ஐந்து கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவில் மணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் கிழக்கு நோக்கி இருக்கிறார். மூலவர் பீமேஸ்வரர் என்றும், தாயார் வேதநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. இது அவர்களின் சின்னமான மீன் கூரையில் இருப்பது நிரூபிக்கப்பட்டது. திப்பு சுல்தான் ஆட்சியின் போது இது மேலும் புதுப்பிக்கப்பட்டது. இந்தக் கோயிலின் சுற்றுச்சுவர் இன்றுவரை முழுமையடையாமல் உள்ளது.
புராண முக்கியத்துவம்
பீமேஸ்வரர் கோயில் திருமணிமுத்தாற்றங்கரையில் நான்காவது கோயிலாக அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல் கஷ்டத்திற்கு ஆளானார்கள். இப்பஞ்சத்தை தீர்க்க என்ன வழி என்று அரசகுருவிடம் கேட்டபோது, அசரீரி மூலம் தகவல் வந்தது. பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் வடதிசை நோக்கி செல்லவேண்டும். அங்கு ஒரு வனத்தில் புருஷாமிருகம் உள்ளது. அது மிகவும் சக்திவாய்ந்தது. சிவன் அருள் பெற்றது. அதனை பிடித்துவந்தால் நாட்டில் கடும்பஞ்சம் தீரும் என்றது. இதனைக்கேட்ட பஞ்ச பாண்டவர்கள் வடதிசை நோக்கி அந்த மிருகத்தை பிடித்துவர சென்றனர். அம்மிருகத்தை பிடித்துவர சென்றபோது, இவர்களை கடுமையாக தாக்கியது. இவர்கள் பயந்து திருமணிமுத்தாற்றங்கரையில் ஓடிவரும்போது, தருமர் ஒரு லிங்கம் செய்து வழிபட்டார். அந்த மிருகம் லிங்கத்தை கண்டதும், சிவபக்தியால் சிவலிங்கத்தை சுற்றிவந்தது. இதனால் அந்த மிருகத்திடமிருந்து தப்பிக்க, திருமணிமுத்தாற்றங்கரையில் ஒன்றன்பின் ஒன்றாக லிங்கப்பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த மிருகமும் ஒவ்வொரு லிங்கமாய் சுற்றிவந்து கோபம் தணிந்தது. இந்த சம்பவம் நடந்த மாவுரெட்டி என்ற ஊரில் உள்ள லிங்கம் பீமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டதால் இக்கோயிலுக்கு பீமேஸ்வரர் கோயில் என்று பெயர்.
நம்பிக்கைகள்
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
சிறப்பு அம்சங்கள்
திருமணிமுத்தாறு சேலத்தில் உருவாகி பரமத்திவேலூர் நஞ்சை இடையாறு கிராமத்தில் காவிரியோடு சேர்கிறது. இந்த ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரவீட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேபீ ஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்ணீ வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய ஐந்து திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்டவை. இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.பஞ்ச காலத்தில் பீமேபீ ஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை
திருவிழாக்கள்
இங்கு தமிழ் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம் ,சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பரமத்திவேலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாமக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்