படேஸ்வர் தொகுப்பு கோவில்கள், மொரேனா மாவட்டம், மத்திய பிரதேசம்
முகவரி
படேஸ்வர் தொகுப்பு கோவில்கள், மிட்டோலி பதாவளி அருகே, மொரேனா மாவட்டம், மத்திய பிரதேசம் – 476 444
இறைவன்
இறைவன்: சிவன் மற்றும் விஷ்னு
அறிமுகம்
பாதேஷ்வர் இந்துக் கோயில்கள் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்டத்தில் அமைந்த 200 இந்துக் கோயில்களின் தொகுதியாகும். கார்ஹி பாதவளி கோட்டை சிவன் கோவிலை அடுத்து சிதிலமடைந்த ஓர் விஷ்ணு கோவிலும் அதற்கடுத்தாற்போல படேஸ்வர் தொகுப்பு கோவில்களும் ஒரு கிமீ தூர இடைவெளியில் அமைந்துள்ளன. இங்கு கிட்டத்தட்ட நூற்றைம்பது கோவில்களுக்கும் மேல இருக்கிறது. ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பிரதிகாரா பேரரசின் கீழ் இருந்த போது இந்த கோவில்கள் கட்டப்பட்டதாக சொல்கிறார்கள். பெரும்பாலானவை சிவன் கோவில்களாகவும் ஒருசில கோவில்கள்ள விஷ்ணுவும் மூலவரா இருக்கிறார்கள். சிவன், விஷ்ணு, பார்வதி மற்றும் பிற கடவுளர்களுக்கு மணற்கற்களால் நிறுவப்பட்ட இக்கோயில்க்ள் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நகரா கட்டிக் கலைநயத்தில் அமைந்த இக்கோயில்கள் குவாலியர் நகரத்திற்கு வடக்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், மொரேனா நகரத்திற்கு கிழக்கே 30 கிலோ மீட்ட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தில்லி சுல்தானகம் ஆட்சியின் போது, இக்கோயில்களில் பெரும்பாலனவைகள் சேதப்படுத்தப்பட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலநடுக்கத்தில் முற்றிலுமாய் சிதைந்துள்ளது படேஸ்வர் கோவில் வளாகம். கச்சப்ப ஃகடா பேரரசு இக்கோவிலை கட்டியுள்ளார். இக்கோவில் எட்டாம் நூற்றாண்டு – பதினொன்றாம் நூற்றாண்டு காலக்கட்ட கோவில் எனக்கூறுகிறார்கள். இக்கோவில் நூற்றாண்டுக்கு முன் வரை அந்த பகுதி கொள்ளைக்காரர்களின் கூடாரமாய் இருந்துள்ளது. கிட்டத்தட்ட நாற்பது ஊர்களை தனது கட்டுப்பாட்டில் வச்சுக்கிட்டு தனி சாம்ராஜ்யமே நடந்திருக்கிறார்கள் இந்த கொள்ளையர்கள். இந்திய தொல்லியல் துறையின் பெரும் முயற்சியாலும் கே.கே.முகம்மது மற்றும் அவரது குழுவினர் கொள்ளையர்களுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளாலும் ஒருவழியாய் சிதைந்துகிடந்த சிற்பியின் கலை உயிர்பெற்று எழத்தொடங்கியது. 2005-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பாதேஷ்வர் கோயில்களை சீரமைத்து, பாதுகாத்து வருகின்றனர்.
காலம்
750 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மிட்டோலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
குவாலியர்
அருகிலுள்ள விமான நிலையம்
குவாலியர்