நெல்லிக்குப்பம் ராதா சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
நெல்லிக்குப்பம் ராதா சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி திருக்கோயில், நெல்லிக்குப்பம், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 108.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி இறைவி: ராதா சத்யபாமா
அறிமுகம்
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெல்லிக்குப்பம் கிராமம். கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் சுமார் 12 கி.மி. தொலைவில் உள்ளது. இந்த நெல்லிக்குப்பத்தில் அகரம் எனும் பகுதில் ஒரு கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் கற்கோயில் ஆகும். ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி ராதா சத்யபாம தேவிகளுடன் சேவை சாதிக்கிறார். கோவிலை சுற்றி செடிகளும் மரங்களும் வளர்ந்துள்ளன. கருவறைக்கு மேலே மரம் வளர ஆரம்பித்துள்ளன. ஆலயம் சீர் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள மக்கள் யாரும் செல்வதாக தெரிவதில்லை. ஒரு நேரம் பூஜை மட்டுமே நடைபெற்று வருகிறது. தொடர்புக்கு திரு ஸ்ரீராம்-9941424938.
காலம்
1000-2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெல்லிக்குப்பம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மறைமலைநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை