நெடுங்காட்டாங்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
நெடுங்காட்டாங்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
நெடுங்காட்டாங்குடி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
இந்த நெடுங்காட்டாங்குடியில் இருநூறாண்டு பழமையான சிவன்கோயில் ஒன்றுள்ளது. காசிக்கு சென்று வந்ததன் நினைவாக கட்டப்பட்ட கோயில் என நினைக்கிறேன். இறைவன்- காசிவிஸ்வநாதர் இறைவி- விசாலாட்சி இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். கருவறையில் இறைவன் சிறிய லிங்க மூர்த்தியாக உள்ளார். எதிரில் ஒரு சிறிய நந்தி உள்ளது. கருவறை வாயிலில் மோதக விநாயகர் உள்ளார், மறுபுறம் ஒரு நாகர் சிலை உள்ளது. பல வருடங்களாக பராமரிப்பின்றி கோயில் உள்ளது. சில இடங்களில் விரிசல் விட்டு நிற்கிறது. மற்றபடி கோயில், சில மாத முயற்சியில் குடமுழுக்கு செய்துவிடலாம் எனும் நிலையில் தான் உள்ளது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
புராண முக்கியத்துவம் :
இன்றைக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் என்று அழைக்கப்படுகின்ற மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி, தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சியை 1674ஆம் ஆண்டு துவக்கி வைத்தார், அவருக்குப் பின், முதலாம் சரபோஜி, துக்கோஜி, பிரதாபசிம்மர், இரண்டாம் துளஜா, இரண்டாம் சரபோஜி, இரண்டாம் … இரண்டாம் சிவாஜி ஆகியோர் ஆட்சி செய்தனர் பிரதாபசிம்மனின் மகன் இரண்டாவது துளசா மன்னன் நாகூர் தர்கா செலவிற்குத் தட்டுப்பாடு நேர்ந்ததை அறிந்து 15 ஊர்களின் வருவாயை நல்கையாக வழங்கினார், அதில் ஒன்று தான் இந்த நெடுங்காட்டாங்குடி, இந்நல்கையை சிக்தா எனும் ஒரு செப்புப் பட்டயத்தில் எழுதப்பட்டு தர்காவில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நெடுங்காட்டாங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி