நாவலுார் ஏகாம்பர நாதேஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி :
நாவலுார் ஏகாம்பர நாதேஸ்வரர் திருக்கோயில்,
நாவலுார், செரப்பணஞ்சேரி ஊராட்சி,
குன்றத்துார் தாலுகா,
சென்னை – 603203.
இறைவன்:
ஏகாம்பர நாதேஸ்வரர்
இறைவி:
காமாட்சி அம்மன்
அறிமுகம்:
படப்பை அருகே, செரப்பணஞ்சேரி ஊராட்சி, நாவலுார் கிராமத்தில், பழமை வாய்ந்த, காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர நாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இரண்டு நந்திகள் இருப்பது, வேறு எங்கும் காண முடியாத சிறப்பு. பல ஆண்டுகளாக, பராமரிப்பு இன்றி காணப்படும் இக்கோவிலின், காமாட்சி அம்மன் சன்னிதி மீது, மரங்கள் வளர்ந்து, கோபுரம் சேதமடைந்துள்ளது. ஏகாம்பர நாதேஸ்வரர் சன்னிதி கோபுரம் மீது, 4 அடி உயரத்திற்கு மரம் வளர்ந்து வருவதால், கோபுரம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், பராமரிக்கப்படுவதே இல்லை. கோவிலுக்குச் சொந்தமான நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்த கோவில் உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாவலுார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தாம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை