நாகம்பந்தல் சிவன்கோயில், அரியலூர்
முகவரி
நாகம்பந்தல் சிவன்கோயில், நாகம்பந்தல், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம் – 608901.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
ஸ்ரீமுஷ்ணம் – ராஜேந்திரபட்டினம் சாலையில் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ளது நாகம்பந்தல் கிராமம். சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தின் வடக்கில் முப்பது கி.மீ. தூரத்தில் உள்ளது இக்கிராமம். தமிழ் குடிக்கு ஒப்பான நாகரீகம் பெற்ற ஒரு இனம் நாகர் இனம். குமரிக்கண்டத்தில் இருந்து வடக்கு நோக்கி குடி பெயர்ந்த ஒரு இனமாக அவர்கள் கருதப்படுகிறார்கள். இந்த நாகர் இன மக்களின் வாழ்விடமாக இது இருந்திருக்கலாம், அதனால் நாகர் பந்தல் என அழைக்கப்பட்டிருத்தல் கூடும். உதாரணமாக நாகூர், நாகர் பட்டினம் நாகர் குடி நாகர் கோயில் என்பன. தற்போது இந்த ஊர்களை நாகம் வழிபட்ட தலங்கள் என மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது நாகம்பந்தல் கிராமம், இங்கு ஊரின் முகப்பிலேயே பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவன்கோயில்.
புராண முக்கியத்துவம்
சிறிய செங்கல் கோயிலாக உள்ளது இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இறைவனின் எதிரில் பெரிய நந்தி ஒன்று நல்ல வேலைப்பாட்டுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இறைவனது கருவறை முகப்பில் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சிறிய மாடங்களில் உள்ளனர். இறைவியின் கருவறை வாயில் கருங்கல்லில் சில குறியீடுகள் போல கோடுகள் வரையப்பட்டுள்ளன, அதன் பொருள் விளங்கவில்லை. இரண்டு கருவறைகளையும் சுற்றி ஒரு மதில் சுவரும் உள்ளது. கோயில் உள்ளூர் மக்களால் சரியாக கவனிக்கப்படாமல் சிதைவடைந்து உள்ளது. ஆங்காங்கே மரம் செடிகள் வளர ஆரம்பித்து உள்ளன, விரைவில் திருப்பணிகள் ஆரம்பிக்கப்படாத பட்சத்தில் பெரிய அளவில் இவைகள் பாதிப்பை தரக்கூடும். கோயிலின் நேர் பின்புறம் ஒரு ஓட்டு கட்டிடம் உள்ளது அதனை திரௌபதி கோயில் என அழைக்கின்றனர். அருகில் உள்ள வேப்பமரத்தடியில் ஒரு பெரிய அம்பிகையின் சிலை ஒன்று கவனிப்பாரின்றி உள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகம்பந்தல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதாச்சலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி